சென்னை: எனக்கு ஒரு மெழுகுசிலை வைத்திருக்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. மிக்க நன்றி. இந்த சிலையை பார்க்கும் போது நானே கண்ணாடியில் பார்ப்பது போல் உள்ளது என நடிகர் அல்லு அர்ஜுன் உணர்ச்சிபூர்வமாக பேசி உள்ளார்.
தெலுங்கு திரை உலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்து டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடித்து சமீபத்தில் வெளியான புஷ்பா படம் தமிழில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். புஷ்பா 2 திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இவர் ஆறு முறை பிலிம்பேர் விருதுகளையும், இந்தியாவின் சிறப்புமிக்க தேசிய விருதையும் பெற்றுள்ளார். இவரை ரசிகர்கள் ஐகான் ஸ்டார் மற்றும் கிங் ஆப் டான்ஸ் என்று செல்லமாக அழைக்கிறார்கள். இந்த நிலையில் பலதரப்பட்ட மக்களின் பாராட்டையும் பெற்ற நடிகர் அல்லு அர்ஜுனுக்கு காலத்தால் அழியாத மெழுகு சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் ப்ளூ வாட்டர்ஸில் அல்லு அர்ஜுனனின் மெழுகு சிலை கடந்த மார்ச் 28ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பின்போது அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் உடன் இருந்தனர். அப்போது அவர்கள் தங்களின் மகிழ்ச்சியையும், ஆதரவையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த மெழுகு சிலை அவருடைய புகழ்பெற்ற பாடலான புட்டபொம்மா பாடலின் மையக்கருவை கொண்டு உருவாக்கபட்டுள்ளதாம். இதைப் பார்ப்பவர்கள் அவருடைய சின்ன சின்ன நடன அசைவுகளை கூட எளிதில் கற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம். இது தவிர அல்லு அர்ஜுன் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் பெற்ற அலா வைகுண்டபுரமுலூ படத்திலிருந்து அவரது நடனக் காட்சியை நினைவுபடுத்தும் வகையிலும், சிவப்பு நிற கோட் ஈர்க்கும் வகையிலும் அவருடைய மெழுகு சிலை வடிவமைகப்பட்டுள்ளதாம்.
முதன் முதலில் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தான் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி நடிகர் அல்லு அர்ஜுன் மகிழ்ச்சியுடன் கூறுகையில், நான் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மேடம் டுசாட்ஸூக்குச் சென்றிருக்கிறேன். அங்கு எனக்கு அற்புதமான அனுபவம் கிடைத்தது. இப்போது எனக்கு ஒரு மெழுகு சிலை வைத்திருக்கிறார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை! மிக்க நன்றி! என்னுடைய இந்த மெழுகு சிலை, கிட்டத்தட்ட என்னைக் கண்ணாடியில் பார்ப்பது போன்ற அனுபவத்தைக் கொடுத்தது என கூறியுள்ளார்.
அல்லு அர்ஜுன் ரசிகரா நீங்கள்.. அப்ப நீங்களும் ஒரு முறை..துபாய், மேடம் டுசாட்ஸ் ப்ளூவாட்டர்ஸ் சென்று இந்திய சினிமாவின் வசீகரிக்கும் நட்சத்திரம் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலையை இனி கண்டு ரசிக்கலாம்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}