சென்னை: குமரி அனந்தன் மறைவையொட்டி பாஜக மூத்த தலைவர் தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா ஆறுதல் கூறியுள்ளார்.
2026ம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளில் வேகம் காட்டி வருகிறது. இந்நிலையில் வருகிற 2026ம் ஆண்டில் எப்படியாவது தமிழ்நாட்டில் கால் பதித்து விட வேண்டும் என்று பாஜக தலைமை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்னும் ஓர் ஆண்டு காலம் உள்ள நிலையில், தற்பொழுதே பாஜக கூட்டணி குறித்து தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காகவும், பாஜக தமிழக தலைவர் மாற்றம் குறித்து முடிவு செய்வதற்காகவும் நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார்.

இரவு முழுவதும் ஆலோசனை மேற்கொண்ட அமித்ஷா, இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி குறித்து அறிவிக்க இருக்கிறார். இதற்கு முன்னர் கிண்டியில் அமித்ஷா தங்கயிருந்த ஓட்டலில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு அமித்ஷா நேரில் சென்றார்.
தமிழிசையை நேரில் சந்தித்தார். தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் மறைவையொட்டி தமிழிசைக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். அமித்ஷாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் முக்கிய இலக்கியப் படைப்புகள்!
சிவனே போற்றி! அரனே போற்றி!
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
சிந்தனைச் சிதறல்.. கொய்யா மரங்களிடமிருந்து மாங்கனிகளை எதிர்பார்க்கலாமா?
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
"As you think, you feel. As you feel, you radiate. As you radiate, you create."
{{comments.comment}}