யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை

Jan 20, 2026,05:14 PM IST

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது பற்றி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் நாளை தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அமமுக தலைவர் டிடிவி தினகரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவர் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவலை தினகரன் தொடர்ந்து மறுத்து வருகிறார். சமீபத்தில் டில்லி சென்ற தினகரன், பாஜக மூட்ட தலைவர்கள் சிலரை சந்தித்ததாகவும், அப்போது கூட்டணி பேசி முடிவு செய்து விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.




மதுராந்தகத்தில் ஜனவரி 23ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் என்டிஏ கூட்டணியின் பிரச்சாரத்தை துவக்கி வைக்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக வைக்கப்பட்ட பேனரில் தினகரனின் படமும் இருந்தது. இதனால் என்டிஏ கூட்டணியில் தினகரன் மீண்டும் இணைந்து விட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் பேனரில் தனது படம் வைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆர்வ கோளாரில் யாரோ வைத்துள்ளார்கள் என பதிலளித்தார் தினகரன். தினகரனின் இந்த பதிலுக்கு பிறகு, அந்த பேனர் அகற்றப்பட்டது.


இதனால் யாருடன் கூட்டணி என்பதை தற்போது வரை சஸ்பென்சாகவே வைத்துள்ளார் தினகரன். இந்நிலையில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக தனது கட்சியினருடன் அவர் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு, பிரதமரின் தமிழக வருகைக்கு முன்னதாக யாருடன் கூட்டணி என்பதை தினகரன் அறிவிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

news

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?

news

இந்திரஜித்!

அதிகம் பார்க்கும் செய்திகள்