பெரியகுளம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்த கையோடு தனது பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார் அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன்.
அதிமுகவில் இருந்தபோது பெரியகுளம் தொகுதி எம்.பியாக இருந்தவர் தினகரன். பின்னர் அந்தத் தொகுதி கலைக்கப்பட்டு தேனி தொகுதியாக மாறியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தத் தொகுதியில் களம் காண்கிறார் தினகரன். பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுகவுக்கு திருச்சி, தேனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் போட்டியிடும் வேட்பாளர்களை பட்டாளம்மன் கோவிலில் வைத்து அறிவித்தார் டிடிவி தினகரன். இதில் திருச்சியில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலரும், மாவட்ட மாநகர செயலாளருமான செந்தில்நாதன் போட்டியிடுவதாகவும், தேனியில் தானே போட்டியிடுவதாகவும் தினகரன் இன்று அறிவித்தார். இதையடுத்து உடனடியாக தேர்தல் பிரச்சாரத்தையும் அவர் தொடங்கினார். தேனி தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டியில் வேன் மூலம் அவர் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

வழியெங்கும் அவருக்கு அமமுக கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். தான் போட்டியிடுவது குறித்து டிடிவி தினகரன் பேசுகையில், நான் யாரையும் போட்டியாக கருதவில்லை. மக்கள் முடிவு செய்வார்கள். நான் பேச மாட்டேன்.. செயலில் காட்டக் கூடியவன். இந்த மண் எனக்கு அரசியலில் பிறப்பு கொடுத்தத மண். இந்த மண்ணின் மக்களின் வீட்டில் நானும் ஒரு பிள்ளை. அவர்களுக்கு என்னைத் தெரியும். அவர்களுக்குத் தேவையானதை நான் செய்வேன்.
ஓபிஎஸ்ஸும், அவரது மகனும் மற்றும் கூட்டணிக் கட்சியினரும் என்னை இங்கே போட்டியிடக் கூறினார்கள். இதனால்தான் நான் இங்கு போட்டியிடுகிறேன். எனக்கு வழி விட்டு விட்டு ஓபிஎஸ் அவர்கள் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். அவரும் வெற்றி பெறுவார், நானும் வெல்வேன்.. கூட்டணிக் கட்சியினரும் வெற்றி பெறுவார்கள் என்று கூறினார் தினகரன்.
பின்னர் வேன் மூலம் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டபோது குக்கரைக் காட்டி மக்களிடையே தனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு பேசியபடி சென்றார் தினகரன்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}