சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்பின்னர் தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எதற்காக, எப்படி, ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்த முழு விவரங்களை அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கினார். அப்போது அவர் பேசுகையில்,
தமிழக அரசின் திட்டங்கள் மக்களிடம் முறையாக விரைவாக சென்றடைய 4 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் சிதம்பரத்தில் நாளை தொடங்கி வைக்கிறார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வரும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதனை அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியும் உள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். தகுதியானவர்கள் விடுபட்டு இருந்தால் விண்ணப்பங்களை பெற்று நிரப்பி கொடுக்க வேண்டும். அவை உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு திட்டத்தில் இணைக்கப்படுவர். மக்கள் அதிகமாக வசிக்கிற இடங்களில் முகாம்கள் நடத்த உள்ளோம். மக்களுக்கு நாம் முகாம் நடத்துவது தெரியப்படுத்த முகாம் நடத்துவதற்கு முன்பாக தன்னார்வலர்களை அனுப்பி சிறப்பு திட்ட முகாம் குறித்து தெரிவிக்க உள்ளோம். இதற்காக ஒரு லட்சம் தன் ஆர்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.ர் நவம்பர் வரை பத்தாயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
முன்பு 20,000 மக்கள் தொகைக்கு ஒரு முகம் இருந்தது. இப்போது 10,000 மக்கள் தொகைக்கு ஒரு முகம் அமைக்கப்பட உள்ளது. முகாம்கள் நடக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு வீடு வீடாகச் சென்று மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். வாரத்திற்கு நான்கு நாட்கள் முகாம் நடைபெறும். இது நவம்பர் மாதம் வரை நடைபெற இருக்கிறது. மக்களின் குறைகளை கேட்டறிய 1100 என்ற எண்ணுடன் 100 பேர் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அரசின் சேவைகளை பெற மக்கள் சிரமப்படுவதை அறிந்து மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசின் திட்டங்கள் செயல்பாடுகள் மக்களிடையே விரைவாக செல்ல வேண்டும் என்று தமிழக முதல்வர் நினைக்கிறார். மக்களின் புகார் மனுக்கள் மீதான உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!
எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!
Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!
தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?
"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!
சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!
{{comments.comment}}