காளி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த.. ஆனந்த் அம்பானி கட்டிட்டு வந்த வாட்ச் விலை இவ்வளவா?

Jul 02, 2024,04:15 PM IST

மும்பை : மகாராஷ்டிராவில் உள்ள நிரல் கிருஷ்ண காளி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த அம்பானி மகன் ஆனந்த் அம்பானி அணிந்து வந்த வாட்ச்சின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


பிரபல தொழிலதிபரும், உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் அனில் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, வைர வியாபாரியின் மகளான ராதிகா மெர்சன்டை ஜூலை 12ம் தேதி திருமணம் செய்து கொள்ள போகிறார். ஆனால் இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் 3 மாதங்களுக்கு முன்பே துவங்கி நடந்து வருகிறது. இவர்களின் திருமண வைபவத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.




ப்ரீ வெட்டிங், பூஜை, பார்ட்டி என திருமண வைபவங்கள் களைகட்டி வருகிறது. மும்பையில் 2023ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கல்யாண ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடந்து வரும் நிலையில் திருமணத்திற்கு அம்பானி குடும்பத்தினர் எப்படி நகை, ஆடைகளை அணிய போகிறார்கள் என்பதை காண அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள். 


கடந்த வாரம் ஆனந்த் அம்பானியின் திருமண பத்திரிக்கையில் வெள்ளி, தங்கத்தால் ஆன சுவாமி சிலைகள் பதிக்கப்பட்டிருப்பது செம வைரலாகி, ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் மகாராஷ்டிராவின் நிரல் பகுதியில் உள்ள கிருஷ்ணா காளி கோவிலுக்கு சென்று, அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். அப்போது சிவப்பு நிற வாட்ச் ஒன்றை அணிந்து வந்திருந்தார். இந்த வாட்ச் என்னவோ பார்ப்பதற்கு திருவிழாவில் விற்கும் சாதாரண கலர் வாட்ச் போல தான் உள்ளது. ஆனால் உண்மையில் இந்த வாட்ச் சாதாரணமானது அல்ல.


மிக அரிதான சிவப்பு கார்பனில் செய்யப்பட்ட Richard Mille RM 12-01 Tourbillon ரகத்தை சேர்ந்தது. மிக குறைவான எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட்டும் இந்த வாட்ச்சின் விலை ரூ.6.91 கோடியாம். ஆனந்த் அம்பானி இது போன்ற அரிதான காஸ்ட் வாட்ச்களை கட்டுவது இது முதல் முறையல்ல. இது போன்ற பல ரக வாட்ச்களை அவர் வைத்துள்ளாராம். Patek Philippe, Richard Mille, Rolex என உலகின் காஸ்ட்லி வாட்ச்கள் பலவும் இவரின் கலெக்ஷனில் உள்ளதாம்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்