- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 23 :
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள் :
மழைக்காலத்தில் மலைகளில் இருக்கும் குகைகளில் வசிக்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நான்கு புறமும், உடலை ஆட்டி பிடரி, ரோமங்கள் சிலிர்க்க கம்பீரமாக நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே புறப்படும். அது போல காயாம்பூ நிறத்தை உடைய கண்ணனே! நீயும் வீர நடை போட்டு உன் கோவிலில் இருந்து வெளியேறி, இங்கு வந்து எங்களுக்கு அருள் செய்ய வேண்டும். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அவற்றை நிறைவேற்றி அருள் செய்ய வேண்டுகிறோம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் கூட்ட நெரிசல்.. விஜய்யிடம் நாளை சம்பவம் செய்யப் போகும் சிபிஐ.. டெல்லியில் விசாரணை
தேசத்தின் மானம் காத்த.. தேசியக் கொடிகாத்த குமரனை தெரிந்து கொள்வோமா?
கூடாரவல்லியில் கைகூடும் மாங்கல்யம்!
குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!
வில்லிபுத்தூர் ஆண்டாளும் கூடார வல்லியின் சிறப்புகளும்!
தென்றல் காற்று தாலாட்ட.. தென்னங்கீற்று தலையாட்ட... குயிலின் ஓசை இசை பாட.. மழை!
இதற்கு மேல்....!
"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்
{{comments.comment}}