திருப்பாவை பாசுரம் 06 :
புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பொருள் :
புற்கள், சிறு பறவைகள் ஒலி எழுப்புவதை பார். நம்முடைய தலைவனாகிய திருமாலின் கையில் இருந்து வெள்ளை நிற சங்கு கோவிலில் எழுப்பும் பெரும் சத்தம் உனக்கு கேட்கவில்லையா? பெண்ணே! விழித்துக் கொள். கம்சன் அனுப்பிய அரக்கியிடம் பால் குடிப்பதை போல் நடித்து, அவளை கொன்றவன் நம்முடைய கண்ணன். அழகாக பூத்த பூக்களை மலர்களுடன், தங்களின் உள்ளம் என்னும் தாமரையையும் கண்ணனுக்கு படைத்து வழிபட முனிவர்களும், யோகிகளும் காத்திருந்து ஹரி, ஹரி என சத்தமிடும் பெரும் சத்தமும் உன் காதில் விழவில்லையா. நம்முடைய மனங்களில் குடிகொண்டிருக்கும் கண்ணனின் அருளை பெறுவதற்காக காத்திருந்து, அவரை அழைப்பது கேட்காமல் இன்னும் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே.
விளக்கம் :
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இறைவனின் அருளை பெறுவதற்காக காத்திருக்கின்றன. உலகில் 64 லட்சம் உயிரினங்கள் வாழ்வதாக கருட புராணம் சொல்கிறது. அனைத்து உயிர்களையும் காப்பது இறைவன் என்றாலும், அவனுடைய அருள் தனக்கு கிடைக்காதா என அனைத்து உயிர்களும் ஏங்கிக் கிடக்கின்றன. ஆனால் மனிதர்களாக பிறந்த நாம் மட்டும் உலக இன்பங்கள், சுகங்களில் உளன்று இறைவனின் அருளை பெற முயற்சிக்காமல் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே இந்த பாடலில் ஆண்டாள் தெளிவுபடுத்தி உள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}