ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 16 .. "நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய கோயில்காப் பானே"

Jan 01, 2024,12:09 AM IST

திருப்பாவை பாசுரம் 16 :


நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய 

கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண

வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;

ஆயர்சிறுசிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.




பொருள் :


எங்களுடைய தலைவனாக இருக்கும் நந்தகோபாலனுடைய கோவில் போன்ற வீட்டை பாதுகாக்கும் காப்பாளனே. கொடிகளும், தோரணங்களும் கொண்டு அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள வாசலில் நின்று காவல் காப்பவரே. வந்து வீட்டின் கதவை திறந்து விடுங்கள். ஆயர்குலப் பெண்களான நாங்கள் கண்ணனை பார்க்க வந்திருக்கிறோம். பல மாயங்கள் செய்து விளையாடும் அந்த கண்ணன் எங்களுக்கு சிறிய பறை போன்ற இசைக் கருவி ஒன்றை தருவதாக வாக்களித்திருந்தான். அதை வாங்கிச் செல்வதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம். கண்ணனிடம் அந்த இசைக் கருவியை வாங்கி, அவனின் புகழினை பாடுவதற்காக காலையிலேயே எழுந்து, சுத்தமாக நீராடி, தயாராக வந்திருக்கிறோம். அவனை போற்றி பாடி, வழிபாட்டினை துவக்குவதற்காக வந்திருக்கிறோம். கதவை எல்லாம் திறக்க முடியாது என முன்னரே கூறி மறுத்து விட்டாமல் வீட்டின் கதவை திறந்து எங்களை உங்களே செல்ல அனுமதிக்க வேண்டும்.


விளக்கம் :


திருப்பாவையின் முதல் 15 பாடல்களில் கண்ணனின் பெருமைகள், வீரம், தோற்றம், அவனுடைய பல விதமான அவதாரங்களையும் குறிப்பிட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் தோழியை எழுப்பி, நீராட அழைத்தாள் ஆண்டாள். பாவை நோன்பின் மகிமை என்ன, பாவை நோன்பினை எப்படி இருக்க வேண்டும். அதனால் என்ன பலன் கிடைக்கும் என அனைவருக்கும் விளக்கிய ஆண்டாள், இந்த பாடலில் கண்ணன் வீட்டிற்கே சென்று அங்குள்ள காவலாளியை எழுப்புகிறாள். இதிலும் ஆயர்குல தலைவனான நந்தகோபலானை புகழ்ந்து, அவரும் அவருடைய மகனுமான கண்ணன் வசிக்கும் இடம் கோவில் போன்று புனிதமானது என போற்றி பாடுகிறாள்.

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)

news

வசந்த நவராத்திரி!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!

news

உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof

news

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்