திருப்பாவை பாசுரம் 28 - கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

Jan 13, 2024,10:34 AM IST
திருப்பாவை பாசுரம் 28 :

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்
பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

பொருள் :



குறை ஏதும் இல்லாத கோவிந்தனே, நாங்கள் கறவை மாடுகளின் பின்னால் சென்று அவற்றிற்கு தேவையானவற்றை கவனித்து, மேய்ச்சல் செய்து வாழ்பவர்கள். அந்த மாடுகள் தரும் பாலை வைத்து உணவு சமைத்து உண்பவர்கள். ஆயர்குல பெண்களானவ எங்களுக்கு உலக அறிவு ஏதும் கிடையாது. ஆனாலும் தலைவனாகிய உன்னை துதித்து, பாடிய பிறகு இந்த பிறவியில் நாங்கள் பிறந்த பலனை அடைந்து விட்டோம். இனி எங்களுக்கு நிச்சயமாக வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பதை மட்டும் நாங்கள் அறிவோம். உன் மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக உனக்கும் எங்களுக்கும் ஒரு உறவு ஏற்பட்டு விட்டது. இதை யாராலும் அழித்து விட முடியாது. அந்த உறவின் உரிமை மிகுதியால் அறியாத பிள்ளைகளான நாங்கள் உன்னை ஒருமையில் அழைத்து பேசி இருப்போம். அதற்காக எங்கள் மீது கோபம் கொள்ளாதே. எங்களின் பிழைகளை பொறுத்து, எங்களுக்கு உன்னுடைய அருளை தர வேண்டும் இறைவனே.

விளக்கம் :

இறைவனை வணங்கினாலே அவனுக்கும் நமக்கும் ஒரு பந்தம் ஏற்பட்ட உணர்வு அனைவருக்கும் வந்து விடும். அதன் காரணமாகவே நமக்கு ஏதாவது துன்பம் ஏற்படும் சமயங்களில் உரிமையுடன் கடவுளிடம் சண்டை போடுவோம், திட்டுவோம். இறைவனை பெயர் சொல்லி, ஒருமையில் அழைப்பதும் தவறு தான். அந்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என அறியாத சிறிய பிள்ளைகளை உலக மக்கள் இறைவனிடம் மன்றாடுவதாக ஆண்டாள் இந்த பாடலில் குறிப்பிட்டுள்ளார். இறைவனை பற்றி எதுவும் தெரியவில்லை என்றாலும், அவனை வணங்கினால் நாம் புண்ணியம் பெற்று விடுவோம். நமக்கு வைகுண்டம் கிடைத்து விடும் என்பதையும் ஆண்டாள் உறுதியாக சொல்கிறார். இந்த பாடலில் கோவிந்தா என்ற நாமத்தை ஆண்டாள் குறிப்பிடுகிறார். திருமாலின் நாமங்களில் மிகவும் உயர்ந்த புண்ணியத்தை தரக் கூடியது கோவிந்த நாமம். அதனாலேயே பெருமாள் கோவிலுக்கு சென்றால் கோவிந்தா என அனைவரும் கோஷமிடுகின்றனர். கோவிந்தா என்ற நாமத்தை சொன்னால் பசு தானம் செய்த பலன் நமக்கு கிடைத்து விடும் என்பது ஐதீகம்.செய்தி விளக்கத்தை உள்ளிடவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)

news

வசந்த நவராத்திரி!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!

news

உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof

news

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்