கோதாவரி: ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில், ராஜவிருந்தை மிஞ்சும் அளவிற்கு 225 வகைகளில் பதாார்த்தங்களைச் செய்து தல பொங்கலுக்கு விருந்து வைத்து மாப்பிள்ளையை அசரடித்துள்ளார் ஒரு மாமியார்.
யார்ரா இந்த மாமியார்? எங்கே உள்ளவங்க? என்று பலரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டுள்ளனர். வாங்க மக்களே வாங்க அந்த மாமியார் - மருமகனை பற்றி பார்ப்போம்.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றது. ஆந்திராவில் சங்கராந்தி (நம்ம ஊர் பொங்கல்) பண்டிகையை ஒட்டி தலை பொங்கல் விருந்து வைப்பது வழக்கம். இந்த விருந்து சமீபகாலமாக பல வகையான உணவுகளை விதம் விதமாக பரிமாறும் விழாவாக மாறி விட்டது.
மருமகனை அசத்துவதற்காக விதம் விதமாக விருந்து வைக்கும் மாமியார்கள் பெருகி வருகிறார்கள். பல வகையான உணவுகளை சமைத்து அசத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மருமகனுக்கு வைக்கும் விருந்தில் வெரைட்டிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு விருந்து வைப்பதை அந்த பகுதியில் உள்ள மக்கள் பெருமையாக கருதி வருகின்றனர். அதிலும் எத்தனை வெரைட்டி என்று பலரும் கேட்டு விருந்து வைப்பவர்களை பாராட்டி வருகின்றனர்.
அப்படி தான் ஒரு மாமியார் 225 வகை டிஸ் செய்து இந்த வருடம் தனது மருமகனை அசத்தியுள்ளார். அந்த விருந்து தற்பொழுது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கொய்யால குட மண்டலம் ராஜாவரம் கிராமத்தை சேர்ந்தவங்கதான் காக்கி நாகேஷ்வர ராவ் -லட்சுமி தம்பதி. இவர்களுடைய மகள் ஜோத்சனா. விஜயவாடாவை சேர்ந்த லோகேஷ் சாய் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்காங்க. இந்த சங்கராந்தி பண்டிகை அவங்களுக்கு தலை பொங்கலாம். பண்டிகைக்கு மாமியார் லட்சுமி, மகளையும், மருமகனையும் வீட்டுக்கு வரழைச்சிருக்காங்க.
மாப்பிள்ளையும் தடபுடலாக விருந்து இருக்கும் என்று நினைத்துக் கொண்டு தான் விருந்துக்கு வந்திருக்காரு. இங்க வந்து பார்த்தா தான் தெரியுது அது ராஜ விருந்து என்று. இதை பார்த்த மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் அசந்துட்டாங்க. இப்படியொரு விருந்தா? என்று. அதிலும் அவருக்கு ராஜ உபசரிப்பு வேற... 225 வெரைட்டியான உணவை சாப்பிட்டு முடிக்க கண்டிப்பாக பத்து வயிறு வேண்டும். அப்படி பார்த்துப் பார்த்துப் பண்ணிருக்காங்க நம்ம லட்சுமி மேடம்.
இதையெல்லாம் பார்த்த நம்ம நெட்டிசன்கள் எல்லாம் பெருமூச்சு விட்டுட்டிருக்காங்க.. ம்ம்ம்.. நம்ம மாமியாரும் இப்படி விருந்து வைக்காம விட்டுட்டாங்களே என்றுதான் பலரும் புலம்புகிறார்கள்.. என்ன பாஸ் பண்றது.. இப்படி ஒரு விருந்து வேணும்னா ஆந்திரவில தான் பொண்ணு எடுக்கனும் போல!
விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!
நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை
ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்
{{comments.comment}}