ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

Oct 24, 2025,05:01 PM IST

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே 23 பேர் பலியாகினர். இதற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர் 


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், சின்னடிக்கூரு கிராமத்தில் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் நடந்த விபத்தில், ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த பேருந்து ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது. இந்த கோர விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள்ளனர். இந்த விபத்து குறித்து அறித்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.


குடியரசு தலைவர் திரவுபதி முர்மு




விபத்து குறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ஏற்பட்ட ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் பலர் உயிரிழந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி


பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றம் அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கர்நாடக முதல்வர் சித்தராமையா


கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தேகூரு கிராமத்துக்கு அருகில் ஹைதராபாத் - பெங்களூரு வழித்தடத்தில் நடந்த துயரமான பேருந்து தீ விபத்து குறித்து கவலையும் வேதனையும் அடைந்தேன். இந்த துயர சம்பவத்தில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகி உள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு




ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கர்னூல் மாவட்டத்தில் சின்ன தேகூர் கிராமத்துக்கு அருகே நடந்த பேருந்து விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதகி்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.


தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி


தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்னூல் மாவட்டத்தில் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்குச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆந்திரப் பிரதேச அதிகாரிகளிடம் பேசி நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவி மற்றும் பிற நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஜோகுலாம்பா கட்வால் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுமாறு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!

news

Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

news

சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!

news

சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!

news

Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!

news

திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்