சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தனக்கு கடும் தண்டனை விதித்து விடாதீர்கள் என்று நீதிபதியிடம் கெஞ்சியுள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம்தான் கொடுமையானது.. கேட்டாலே கொதிப்படைய வைக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி சக மாணவருடன் அமர்ந்து மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் இருவரையும் மிரட்டி, மாணவனை அனுப்பிவிட்டு மாணவியை தனியாக அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் செய்திருந்தார்.
இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அதே பகுதியில் பரோட்டா கடை வைத்திருந்தவர்தான் ஞானசேகரன். கடந்த 5 மாதங்களாக நடந்த விசாரணையின் அடிப்படையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஞானசேகரன் குற்றவாளி என்றும் அவர் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
இன்று நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர் செய்யப்பட்டபோது அவரிடம், தீர்ப்பு குறித்து என்ன சொல்ல விரும்புகிறாய் என்று நீதிபதி கேட்டபோது, எனக்கு வயதான தாயார் இருக்கிறார். நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பா இல்லாததால் அம்மாவை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு 8 வயதில் மகள் உள்ளார். அவரையும் நான் பார்க்க வேண்டும். எனவே குறைந்த அளவிலான தண்டனை தருமாறு கேட்டுள்ளார் ஞானசேகரன்.
என்ன கொடுமை பாருங்க.. அந்த இரவு நேரத்தில் ஒரு அப்பாவி பெண்ணை கொடூரமாக சீரழித்தபோது தனது தாயார் கண்ணுக்குத் தெரியவில்லை.. தனது மகள் கண்ணுக்குத் தெரியவில்லை.. தனக்கும் ஒரு மகள் இருக்கிறாளே என்ற எண்ணம் கூட அந்த நேரத்தில் வரவும் இல்லை.. ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனாக அவர் அப்போது நடந்து கொள்ளவும் இல்லை. அந்த உணர்வே அவருக்கு இல்லை.. ஆனால் இன்று தண்டனையிலிருந்து தப்பிக்க அம்மாவையும், மகளையும் கேடயமாக பயன்படுத்தப் பார்க்கிறார் ஞானசேகரன்!
ஆனால் ஞானசேகரனின் எந்தக் கோரிக்கையையும் ஏற்கக் கூடாது. இரக்கமே காட்டாமல் உச்சபட்ச தண்டனை தர வேண்டும் என்று அரசுத் தரப்பு வாதிட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி கூறியுள்ளார். கடும் தண்டனை கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுமக்களும் கூட ஞானசேகரனுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
பதிலடி கொடுக்கத் தயாராகும் டாக்டர் அன்புமணி.. நாளை முதல் 3 நாட்கள் அதிரடி ஆலோசனை!
வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது.. அன்புமணிக்கு தலைமை பண்பு அறவே இல்லை.. டாக்டர் ராமதாஸ்!
PMK Fiasco: அன்புமணி மீது பகிரங்க புகார் வைத்த டாக்டர் ராமதாஸ்.. பாமக எதிர்காலம் என்னாகும்?
Dr Ramadoss Vs Anbumani: பாமக இரண்டாக பிளவுபட்டால் என்னாகும்.. எந்த கட்சி கூட்டணிக்கு அழைக்கும்?
ராமதாஸின் கொந்தளிப்பை பொருட்படுத்தாமல்.. கூலாக அறிக்கை விட்ட டாக்டர். அன்புமணி..!
அரசியலில் நம்பிக்கை தான் முக்கியம்.. தேமுதிகவிற்கு சீட் கொடுக்க வேண்டியது அதிமுக கடமை.. பிரேமலதா
80களில் பிரபலமான நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவால் காலமானார்..!
தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்..கமலின் பேச்சுக்கு கன்னட அமைப்புகள் மிரட்டுவதா..சீமான் கண்டனம்
வங்கக்கடலில் நிலவிவரும்.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மேலும் வலுவடையும்.. வானிலை மையம் தகவல்..!
{{comments.comment}}