"தமிழ்நாடு அல்ல.. தமிழகம் என்றுதான் பெயர் சூட்ட விரும்பினார் அண்ணா".. நாராயணன் திருப்பதி

Jan 16, 2023,09:22 AM IST
சென்னை:  தமிழ்நாட்டுக்கு தமிழகம் என்றுதான் பெயர்சூட்ட விரும்பினார் அண்ணா என்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியே தெரிவித்துள்ளதாக பாக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.



இதுதொடர்பாக நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

காமராஜர் ஆட்சி காலத்தில் 24-12-1961 அன்று சட்டமன்றத்தில் சி.சுப்பிரமணியம் அவர்கள் இனி தமிழ் நாடு சட்டமன்றம் என்று அழைப்போம், தமிழ்நாடு அரசு என்று பேசுவோம் என்று மகிழும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று சொன்னார். எங்கேயெல்லாம் மெட்ராஸ் மாகாணம் என்று உள்ளதோ, அதையெல்லாம். 
தமிழ் நாடு என அழைக்கலாம்,. ஆனால் அது சட்டத்துக்கு புறம்பானது அல்ல. அதனால் சட்டம் இயற்ற தேவையில்லை என்றார் காமராஜர். 

ஆகவே, தமிழ்நாடு என்று காமராஜர் அறிவித்த போதிலும், அதை சட்டமாகியது அண்ணா அவர்களின் ஆட்சியில் தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அண்ணா அவர்கள் விரும்பியது "தமிழகம்" என்ற பெயர் தான் என்பதை 15-10-1980 அன்று பொன்னேரி அரசினர் கல்லூரி விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய உரையில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

"அப்பொழுது இருந்த அமைச்சர் பெருமக்களை பார்த்து நான் கேட்ட போதெல்லாம் சொன்னார்கள், 'தமிழ்நாடு,தமிழ்நாடு - என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களே!அந்தப் பெயர் இலக்கியத்திலே இருக்கிறதா? என்றெல்லாம் கேட்டவர்கள் உண்டு. "இலக்கியத்திலே இல்லாத ஒரு பெயரை வைக்கச் சொல்கிறாயே நியாயம் தானா? என்று கூட கேட்டார்கள்.

நான் சட்டமன்றத்திலேயே சொன்னேன், " இமிழ் கடல் வரைப்பில் தமிழகம்" என்று சிலப்பதிகாரத்திலே இருக்கிறது. ஒரு வேளை. சிலப்பதிகாரத்தை நீங்கள் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்ளவில்லையா?" என்று நான் சட்டமன்றத்தில் கேட்டிருக்கிறேன். ஆனால், நிறைவேறவில்லை. "அண்ணா அவர்கள் தான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற உடன் சென்னை ராஜ்ஜியம் என்கின்ற பெயரை மாற்றி "தமிழ்நாடு" என்கின்ற பெயரை உருவாக்கி- இருந்த பெயரை அறிமுகப்படுத்தி 'தமிழகம்' என்று பெயரிடலாமா? என்ற சர்ச்சை எழுந்த பொழுது டெல்லியிலே இருந்தவர்கள் 'தமிழகம்' என்று சொன்னால் எங்களால் சொல்ல அவ்வளவு சுலபமாக இருக்காது. எனவே தமிழ்நாடு என்றே இருக்கட்டும் என்று அவர்கள் கேட்டுக்கொள்ள, அதற்கேற்ப, பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்கின்ற பெயரை நம்முடைய மாநிலத்திற்கு சூட்டுகிற நிகழ்ச்சியை கோலாகலமாகக் கொண்டாடி சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்". (ஆதாரம் : கருணாநிதி அவர்கள் எழுதியுள்ள பாரதி பதிப்பகத்தின், ஒளி படைத்த கண்ணினாய்  வா! வா! வா! புத்தகத்தில் பக்கம் எண் -100) 

மேலும், 1972ம் ஆண்டு, மே 6ம் நாள், சென்னையில் இளங்கோவடிகள் விழாவில் கருணாநிதி அவர்கள், 'தமிழகம்' என்று இந்த மண்ணுக்குப் பெயர் சூட்ட சங்கரலிங்கனார் ஏறத்தாழ 70 நாட்கள் உண்ணாவிரதமிருந்து செத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைக்க சங்கரலிங்கனார் செத்ததை எடுத்துச் சொன்னோம். இலக்கியத்தில் இருக்கிறதா? என்று கேட்டார்கள். தமிழ் கடல்வரைப்பில் தமிழகம் என்று சிலப்பதிகாரத்தில் இருக்கிறதே என்று சொன்னோம். (மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று புத்தகத்தில், 144வது பக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள்.)

அதாவது அண்ணா அவர்கள் விரும்பியது  தமிழகம் என்ற பெயராக இருந்தாலும், டெல்லியிலே இருந்தவர்கள் விரும்பிய காரணத்தினாலே தான் தமிழ் நாடு என்று பெயர் சூட்ட ஒப்புக்கொண்டார் என்று  திரு.கருணாநிதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். நம்மை பொறுத்தவரை தமிழகம் என்றாலும், தமிழ்நாடு என்றாலும் ஒன்று தான். ஆனால், தமிழகம் என்பதை தான் அண்ணா அவர்கள் விரும்பியுள்ளார் என்பதை ஆதாரபூர்வமாக கருணாநிதி அவர்கள் குறிப்பிட்ட அதே கருத்தை  ஆளுநர் அவர்கள் 'தமிழ்நாடு என்பதை விட தமிழகம்' என்ற சொல் பொருத்தமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டதற்கு , இன்றைய தி மு க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கி எழுவது ஏன்? 

அன்றைய தி மு க தலைவரின் கருத்தை தானே ஆளுநர் பிரதிபலித்திருக்கிறார். அதை மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்பது ஏன்? அண்ணாவின் விருப்பத்தை மு.க.ஸ்டாலின் அவர்கள் வெறுப்பது ஏன்? டெல்லியில் இருப்பவர்களுக்காக இன்னும் தன் நிலையை மாற்றி கொள்ள தி மு க மறுப்பது ஏன்? என்று கேட்டுள்ளார் நாராயணன்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்