சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 50 தொகுதிகளுக்கு தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர்களை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார்.
முன்னாள் தலைவர்களான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், எல்.முருகன், அண்ணாமலை ஆகியோரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இதில் அண்ணாமலைக்கு மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம், சிங்காநல்லூர் ஆகிய 6 சட்டசபைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல். முருகனுக்கு பரபரப்பான திருப்பரங்குன்றம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம், ராதாபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

டாக்டர் தமிழிசை செளந்தரராஜனுக்கு பொள்ளாச்சி, நாங்குநேரி, மயிலாப்பூர், கும்மிடிப்பூண்டி, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளை பாஜக மாநிலத் தலைமை ஒதுக்கீடு செய்துள்ளது.
சட்டசபை உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு, அவர் உறுப்பினராக உள்ள கோவை தெற்கு, திருப்பூர் தெற்கு, குன்னூர் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கித் தரப்பட்டுள்ளன.
முன்னாள் தேசியச் செயலாளர் எச். ராஜாவுக்கு 5 தொகுதிகள் தரப்பட்டுள்ளன. சிவகங்கை, திருப்பத்தூர், உடுமலைப்பேட்டை, முதுகுளத்தூர், விளவங்கோடு ஆகியவையே அவை.
முன்னாள் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு பழனி, மேட்டுப்பாளையம், பரமக்குடி, தென்காசி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த தேர்தல் பொறுப்பாளர்களுக்கான வழிகாட்டுதல்களையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளார் நயினார் நாகேந்திரன். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பொறுப்பாளர்களுக்கான குறிப்புகள். சுற்றுப்பயணம் செல்ல உள்ள தொகுதியில் இருந்து ,
1. தங்களுக்கு குறைந்தது இரண்டு சட்டமன்ற அதிகபட்சமாக ஏழு சட்டமன்ற தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
2. இந்த சட்டமன்ற தொகுதியில் நாம் குறைந்தது இரண்டு முறையாவது முழுமையான சுற்றுப்பயணத்தை நடத்த வேண்டும்.
3. இந்த சட்டமன்றத்தில், ஒவ்வொரு முறையும் நமது சுற்றுப் பயணத்தின் போது நாம் 24 மணி நேரம் செலவிட வேண்டும் (இரவு தங்கி வர வேண்டும்)
4. சமுதாயத் தலைவர்கள் சந்திப்பு
5. சட்டமன்ற குழுவோடு சந்திப்பு
6. தொகுதியில் உள்ள மாவட்ட, மண்டல் அணி நிர்வாகிகளோடு சந்திப்பு
7. தொகுதியில் உள்ள பிரிவு நிர்வாகிகளோடு சந்திப்பு
8. ஒரு சக்தி கேந்திரத்திற்கு நேரடியாக சென்று ஊக்கப்படுத்துதல்
9. ஒரு பூத்திற்கு நேரடியாக சென்று பலம் வாய்ந்த பூத் பற்றி வழிகாட்டுதல்
10. கார்யகர்தாவோடு தனிப்பட்ட முறையில் பேசுதல்
11. ஒரு தொகுதி வெற்றிபெறுவதற்கான வழிமுறைகள் (உதா:நேரம் கொடுத்தல், ஒருங்கிணைந்து திட்டமிட்டு பணி செய்தல், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளோடு இணைந்து செல்லுதல்,தொகுதி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோள், etc...)
12. எல்லா நிகழ்வும் ஒரு சுற்று பயணத்தில் முடிக்க வேண்டும் என்று பாராமல் தொடர் சுற்றுப்பயணத்திலும், தொகுதிக்கு தகுந்தவாறு திட்டமிடலாம். இது ஒரு வழிகாட்டுதல் மட்டும் தான் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு
2 மனைவி.. வாரத்துல ஆளுக்கு 3 நாள்... ஞாயிற்றுக்கிழமை லீவு.. டைம்டேபிள் எப்பூடி!
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
சென்னையில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில்.. பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது
50 சட்டசபைத் தொகுதிகளுக்கு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்கள்.. அண்ணாமலைக்கு எத்தனை?
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
{{comments.comment}}