கடலூர்: பாஜக கூட்டணி சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது பிரதமர் சொன்ன 400 எம்.பிக்களில் தங்கர் பச்சானும் ஒருவர் என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார் அண்ணாமலை.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 19ம் தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும்,தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினர்களும் கடும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக கூட்டணி சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக முதுநகர் பகுதியில் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், தங்கர் பச்சானுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றியடையச் செய்ய வேண்டும். பிரதமர் மோடி கூறிய 400 எம்பிக்களில் தங்கர் பச்சானும் ஒருவர். அடித்தட்டு மக்களுக்கு பாரபட்சம் இன்றி பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் வெறும் வாய் பேச்சு தான். முதலமைச்சர், எம்.பி, எம். எல்.ஏ.க்கள் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால், தங்கர் பச்சானை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை உடனடியாக கொண்டுவரப்படும்.
தங்கர் பச்சான் இயக்குனராக மட்டுமல்லாமல், பாட்டாளி மக்கள் கட்சிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார். திமுக ஏற்கனவே இத்தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிட தகுதி இல்லை என்று கூறி வாக்கு சேகரித்தார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}