சென்னை: அண்ணாமலை முதலமைச்சர் ஆவது என்பது இலவு காத்த கிளி போலத்தான். அது நடக்காத விஷயம் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.
எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் என்பதால் 107 கிலோவில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. விழாவில் அதிமுக முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஆயிரத்தில் ஒருவராக போற்றப்படுகிறவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். உலகம் போற்றக்கூடியவர். அவர் நடித்த படத்தில் பல நல்ல கருத்துக்களை கூறினார். தற்போது அவ்வாறான கருத்துக்கள் எதுவும் இல்லை.
அன்பு, நன்றி, கருணை கொண்டவர் மனித உருவில் உள்ள தெய்வம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணா வழியில் பேகிறவன் நான்.த மிழர்கள் என்றால் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு என்பது வீரமும் காதலும். வீரம் இல்லாதவனும் தமிழன் இல்லை. காதல் இல்லாதவனும் தமிழனும் இல்லை.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ரஜினிகாந்த்தை அறிவிக்க இருந்ததாக துக்ளக் விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தது பற்றி பேசினார். அது, குருமூர்த்தி மற்றும் ரஜினி இடையே உரையாடல் நான்கு சுவர் கொண்ட அறைக்குள் நடந்தது. இந்த விவகாரம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்து தெரிவிக்கட்டும் அதன் பின்னர் நான் எனது கருத்தை கூறுகிறேன்.
நான் சொன்னேன் சொல்லலைன்னு ரஜினி சொல்லட்டும் அப்புறம் நான் சொல்றேன். நான்கு அறைக்குள் நடந்ததை நான் எப்படி அம்பலத்தில் சொல்ல முடியும். நான் சொல்றேன் எது எப்படி இருந்தாலும் அண்ணாமலை முதலமைச்சர் ஆவது என்பது இலவு காத்த கிளி போலத்தான். அது நடக்காத விஷயம். தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட அம்மாவுடைய ஆட்சி தான் எடப்பாடி தலைமையில் மலரும் என்றார் ஜெயக்குமார்.
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
{{comments.comment}}