"வலிக்குதாண்ணா".. காயமடைந்த நிர்வாகியின்.. காலைத் தொட்டு நலம் விசாரித்த அண்ணாமலை!

Jan 21, 2023,02:14 PM IST
கடலூர்: கடலூர் சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காயமடைந்த பாஜக நிர்வாகியின் காலைத் தொட்டுப் பார்த்து நலம் விசாரித்த செயல் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியில் ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும், அனல் பறக்கவும் காணப்பட்டாலும் கூட கட்சியினரிடம் காட்டும் கனிவு அவர்களை நெகிழ வைத்து வருகிறது. தொண்டர்களின் தலைவனாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் அண்ணாமலையும் ஆர்வம் காட்டுகிறார்.

கட்சியினரைத் தேடித் தேடிப் போகிறார். நிர்வாகிகளின் வீடுகளில் சாப்பிடுகிறார். இந்த நிலையில் கடலூர் சென்றிருந்த அண்ணாமலை,  அங்கு மார்க்கெட் காலனி 28வது வார்டு உறுப்பினர் சக்திவேல் வீட்டுக்குச் சென்றார். அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டு கட்டுடன் இருப்பதை அறிந்து சென்றார்.

சக்திவேல் வீட்டுக்குச் சென்ற அவர் அவரது காலைத் தொட்டுப் பார்த்து இப்ப எப்படி இருக்குண்ணா என்று கேட்டு நலம் விசாரித்தார். இதைப் பார்த்து தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அண்ணாமலை போட்டுள்ள டிவீட்டில், சக்திவேல் அவர்கள், காலில் காயமடைந்த செய்தி அறிந்து, இன்று அவரது இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழுமையான உடல் நலன் பெற்று, மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்