சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் பாஜக மொத்தம் 27 தொகுதிகளில் களம் காணுகிறது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தற்போது பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் மொத்தம் 27 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன், கோவையில் வானதி சீனிவாசன், விளவங்கோட்டில் விஜயதரணி மற்றும் அறந்தாங்கியில் கவிதா ஸ்ரீகாந்த் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முழு வேட்பாளர் பட்டியல்:

கந்தர்வக்கோட்டை தனி - சி. உதயக்குமார்
புதுக்கோட்டை - என். ராமச்சந்திரன்
அறந்தாங்கி - கவிதா ஸ்ரீகாந்த்.
திருப்பத்தூர் - கே.சி. திருமாறன்
மானாமதுரை - வி. பொன் பாலகணபதி
மதுரை தெற்கு - பேராசிரியர் ராம சீனிவாசன்
சாத்தூர் - நயினார் நாகேந்திரன்
ராமநாதபுரம்- ஜிபிஎஸ் கே நாகேந்திரன்
ஆவடி - ராஜசிம்மா மகிந்திரா (எம் அஸ்வினிகுமார்)
திருச்செந்தூர் - கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்
மயிலாப்பூர் - டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
வாசுதேவநல்லூர் தனி - அனந்தன் அய்யாசாமி
தளி - டாக்டர் நாகேஷ் குமார்
ராதாபுரம்- எஸ்.பி.பாலகிருஷ்ணன்
திருவண்ணாமலை - சி ஏழுமலை
நாகர்கோவில் - எம்.ஆர். காந்தி
ராசிபுரம் தனி - டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்
குளச்சல் - டி. சிவக்குமார்
மொடக்குறிச்சி - கிருத்திகா சிவக்குமார்
பத்மநாபபுரம் - பி. ரமேஷ்
உதகமண்டலம் - போஜராஜன்
விளவங்கோடு - எஸ். விஜயதாரணி
அவினாசி தனி - டாக்டர் எல். முருகன்
திருப்பூர் தெற்கு - எஸ். தங்கராஜ்
கோவை வடக்கு - வானதி சீனவாசன்
திருவாரூர் - கோவி சந்துரு
தஞ்சாவூர் - ஏ.பி.முருகானந்தம்
அண்ணாமலை போட்டியிடவில்லை

முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பெயர் இப்பட்டியலில் இடம் பெறவில்லை. இதன் மூலம் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
கோவை எம்.பி தொகுதிக்குட்பட்ட தொகுதியை அண்ணாமலை கேட்டு வந்ததாகவும், குறிப்பாக கோவை வடக்கை அவர் கோரியதாகவும், அது கிடைக்காத காரணத்தால் அவர் போட்டியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்
{{comments.comment}}