சென்னை: தமிழ் நாட்டில் இருக்கும் பல பேய்களை ஓட்டுவதற்கு தான் இந்த வேதாளம் வந்துருக்கேன். இந்த பேயை முடித்து விட்டு அடுத்த பேய்க்கு வருகிறேன் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாருக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கலகலப்பான பதில் கொடுத்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவர் திருவுருவச்சிலைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தேச விடுதலைக்காக இறுதிவரை துணிச்சலுடன் போராடி தன் உயிரை தியாகம் செய்த மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்கள் பிறந்த தினம் இன்று.ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரில் இறுதிவரை பின்வாங்காமல் அச்சமின்றி போரிட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
மாவீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவ சிலைக்கு மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினோம். 2015 ஆம் ஆண்டு மாவீரர் அழகுமுத்துக்கோனுக்கு தபால் தலை வெளியிட்டு புகழ் சேர்த்த பெருமைக்குரியவர் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழ்நாட்டில் பல பேய்கள் இருக்கிறது. இந்த வேதாளம் வந்ததே அந்த பேய்களை ஓட்டத்தால் ஒவ்வொரு பேயாக ஓட்டிக் கொண்டிருக்கிறோம். நிறைய பேய்கள் இருப்பதால் இந்த பேயை முடித்துவிட்டு அடுத்த பேய்க்கு வருகிறேன். காத்திருங்கள் என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
முன்னதாக ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, அண்ணாமலை என்ற வேதாளம் இப்போது எங்களை விட்டு விட்டு, செல்வப் பெருந்தைகையைப் பிடித்துக் கொண்டு விட்டது என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அதற்குத்தான் இப்படி பதில் கொடுத்துள்ளார் அண்ணாமலை.
ஆக மொத்தம் ராகவா லாரன்ஸ் படம் போல.. பேய்க்கும் பேய்க்கும் சண்டையாக மாறியிருக்கிறது அரசியல் களம்!
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}