கச்சத்தீவை உறுதியாக மீட்போம்.. அடித்து சொன்ன.. அண்ணாமலை

Apr 13, 2024,04:51 PM IST
ராமநாதபுரம்: காங்கிரஸ் அரசும் திமுக அரசும் தாரைவார்த்த கச்சத்தீவை உறுதியாக மீட்போம். மறைந்த ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற ஒரே தலைவர் ஓபிஎஸ் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினர்களும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். 

அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் அரசும் திமுக அரசும் தாரைவார்த்த கச்சத்தீவை உறுதியாக மீட்போம். ஜெ.வின் நம்பிக்கை பெற்ற ஒரே தலைவர் ஓபிஎஸ். ராமநாதபுரத்திற்கு நடந்த அநியாயத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஓபிஎஸ் குரல் கொடுப்பார்.



ராமநாதபுரத்தில் பிரதமருக்கு பதிலாக அவரால் களமிறக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். பிரதமர் மோடி போட்டியிட்டால் எப்படி ஆதரவு கொடுப்பீர்களோ அப்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஆதரவு தர வேண்டும். பிரதமர் மோடி ராமநாதபுரத்தை தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கிறார். பிரதமர் மோடி எப்போது பேசுவார் என்று உலக தலைவர்கள் எதிர்பாத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியிடம் எப்போது வேண்டுமானாலும் பேசும் செல்வாக்கு பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம்.

ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தான். எம்.ஜி.ஆரை எப்படி கருணாநிதி வெளியேற்றினாரோ அதை போல ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி வெளியேற்றி இருக்கிறார். ராமநாதபுரத்தில் இருக்கும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டுமே முடியும். நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தான் ஓ.பன்னீர்செல்வத்தின் விஸ்வரூபம் தெரியும் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்