டெல்லி: தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது, தமிழ்நாட்டில் உள்ள அண்ணாமலை ஆதரவாளர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது. என்ன பதவி என்று தெரியாமலேயே அவரைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர் தொண்டர்கள்.
தேசிய அளவில் பதவி கொடுக்கப்பட்டாலும் கூட தமிழ்நாடு அரசியலிலும் அண்ணாமலை முக்கியப் பங்கு வகிப்பார் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். இது அவரது ஆதரவாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படும் என்று தெரியவில்லை. ஆனால் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பில் அண்ணாமலை அமர வைக்கப்படலாம் என்று தெரிகிறது. ஒரு காலத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோர் இந்தப் பொறுப்பில் அமர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்களுக்குத்தான் இந்த முக்கியப் பொறுப்பு வழக்கமாக அளிக்கப்படும். ஒரு வேளை அண்ணாமலைக்கு கிடைத்தால் அது பெரிய விஷயம்தான்.
மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோதுதான் தமிழ்நாட்டில் பாஜக அதிரடியாக வளர்ச்சி பெற்றது. அதி வேகமான கவனிப்பையும் அது ஈர்த்தது. திமுகவுக்கு கடும் போட்டி தரும் வகையில் அண்ணாமலையின் செயல்பாடுகள் இருந்ததால் அது அதிமுகவைக் கூட ஓரம் கட்டி விட்டு வேகமாக வளர்ந்து வந்தது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசப் போக அது பூகம்பமாக வெடித்து கூட்டணியை விட்டு அதிமுக விலகியது. அதன் பின்னர் அது தனித்தே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க கடுமையாக முயன்றது பாஜக.

கூட்டணி வேண்டும் என்றால் அண்ணாமலை தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்று அதிமுக திட்டவட்டமாக கூறி விட்டதால் வேறு வழியில்லாமல் அண்ணாமலையை மாற்றும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது. நயினார் நாகேந்திரன் தலைவரானார். இந்த நிலையில்தான் அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுத்தால் அவரது ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் சோர்வில்லாமல் பணியாற்றுவார்கள். அண்ணாமலையும் கூட உயர் பொறுப்பு வகிப்பவர் என்ற அந்தஸ்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்படலாம் என்று பாஜக தலைமை கருதுகிறதாம்.
கடந்த ஏப்ரல் மாதம் அண்ணாமலை மாற்றப்பட்டபோதே அவரை வெகுவாக பாராட்டியிருந்தார் அமித்ஷா. இப்போது முக்கியப் பொறுப்பு அளிக்கப்படப் போவதாக அவர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். இது அண்ணாமலை தரப்பை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
ஐங்கரன் (நெடுங்கதை)
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
{{comments.comment}}