இன்னும் 2 நாட்களில் முக்கிய முடிவை அறிவிப்பார் அண்ணாமலை .. பாஜக

Jan 22, 2023,12:53 PM IST
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக இன்னும் 2 நாட்களில் அண்ணாமலை முக்கிய முடிவை அறிவிப்பார் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள், முஸ்தீபுகள் மும்முரமாகியுள்ளன. திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் இன்று வேட்பாளர் பெயரை அறிவிக்கவுள்ளது.

அதிமுக கூட்டணியில் இதுதொடர்பாக இன்னும் தெளிவு பிறக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக போட்டியிட விரும்புகிறது. அது போட்டியிட்டால் எதிர்த்து வேட்பாளரை நிறுத்த ஓ.பன்னீர் செல்வம் அணியும் தயாராக இருக்கிறது. அதேசமயம், இருவரின் ஆதரவுடன் பாஜக தானே போட்டியிட முயல்கிறது. இதனால் அதிமுகவின் இரு அணித் தலைவர்களிடையேயும் சமரசம்  ஏற்படுத்த பாஜக பல்வேறு வழிகளில் முயற்சித்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவை மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்னும் 2 நாட்களில் அறிவிப்பார். ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிட வேண்டும் என்று நாடே விரும்புகிறது, மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இதுதொடர்பான முடிவை அண்ணாமலை வெளியிடுவார்.

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். திமுகவுக்கு எதிராக அனைத்து அணிகளும் ஒன்றுபட வேண்டும். இன்னும் தேர்தலுக்கு கால அவகாசம் உள்ளது. எனவே இரு அணிகளும் ஒன்று சேரும் வாய்ப்புகள் உள்ளன என்றார் ராமலிங்கம்.







சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்