சென்னை: கோவை அன்னபூர்ணா குரூப் ஆப் ஹோட்டல்ஸ் அதிபர் சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வருத்தம் தெரிவித்த வீடியோ வெளியானதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சமீபத்தில் கோவைக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்திருந்தார். அப்போது அவர் அங்கு தொழிலதிபர்களைச் சந்தித்தார். அந்த சமயத்தில் பலரும் வருமான வரி, ஜிஎஸ்டி உள்ளிட்டவை குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். அதேபோல அன்னபூர்ணா குரூப் அதிபர் சீனிவாசனும் தனது கருத்தை தனது பாணியில் எடுத்து வைத்தார். அவரை நகைச்சுவையாக கூறிய கருத்துக்கள் பெரும் வைரலாகின.

இந்தக் கருத்தை தெரிவித்த அடுத்த நாளே அவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஹோட்டலில் நேரில் சந்தித்து தனது பேச்சுக்காக மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின்போது கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் உடன் இருந்தார். இதுதொடர்பான வீடியோவை சிலர் வெளியிட்டு விட்டனர். எழுந்து நின்று சீனிவாசன் மன்னிப்பு கேட்பதாக வெளியான வீடியோவால் பெரும் பரபரப்பும் சர்ச்சையும் எழுந்தது.
கோவை மண்டலத்தில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் அன்னபூர்ணா. அப்படிப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் இதுபோல மன்னிப்பு கேட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரை கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்ததாக பரவிய தகவலால் கோவை மண்டலம் முழுவதும் பாஜகவினர் மீது அதிருப்தி திரும்பும் சூழல் உருவானது. இதை பாஜக தரப்பு எதிர்பார்க்கவில்லை. பாஜகவினர் மத்தியிலும் கூட இந்த நிகழ்வுகள் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதை பெரிதுபடுத்த ஆரம்பித்ததால் பாஜக தரப்பில் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்திற்காக மன்னிப்பு கேட்டு அதிரடியாக அறிக்கை விட்டுள்ளார். லண்டனுக்குப் படிக்கப் போயுள்ள அண்ணாமலை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு:
தமிழ்நாடு பாஜக சா்பில், நமது நிதியமைச்சருக்கும், கண்ணியம் மிக்க வணிக உரிமையாளருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் குறித்த வீடியோவை வெளியிட்டதற்காக, எங்களது கட்சியினர் சிலரின் செயலுக்காக நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நான் அன்னபூர்ணா ரெஸ்டாரென்ட் உரிமையாளர் சீனிவாசனிடம் பேசினேன். அவரிடமும் இந்த தனியுரிமை மீறல் நிகழ்வுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டேன்.
அண்ணன் அன்னபூர்ணா சீனிவாசன், தமிழ்நாட்டு வர்த்தக சமுதாயத்தின் தூண் ஆவார். மாநிலத்தின், நாட்டிந் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்கு வகிப்பவர். இந்த விவகாரத்தை இத்தோடு விட்டு விடுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}