காபூல்: ஆப்கானிஸ்தானின் பைசாத் அருகே நள்ளிரவு 12:10 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது.
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். குறிப்பாக இந்துகுஷ் பிராந்தியம் அதிக அளவில் நிலநடுக்கங்களை சந்திக்கும் பகுதியாகும். இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவபசமாக மக்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் மசார் இ சரீஃப் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்தது என்பது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் பைசாத் அருகே நள்ளிரவு 12:10 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பைசாத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 130 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் ஏற்படும் தொடர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}