வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் களைகட்டிய நிலையில், அதிபர் ஜோ பைடனுக்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே விவாதங்களில் அவரது செயல்பாடு சர்ச்சையான நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் பங்கேற்க இருந்த பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட இருக்கிறார். அதேபோல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சாரக் கூட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒரு நபர் டிரம்பை துப்பாக்கியால் சுட்டதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது நினைவிருக்கலாம். இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரக் கூட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஒரு பக்கம் டிரம்ப்பின் செல்வாக்கு ஏறி வருகிறது. மறுபக்கம் அதிபர் ஜோ பைடனின் செல்வாக்கு சரிந்து வருகிறது. அவர் விவாதங்களில் சரியாக செயல்படவில்லை என்ற கருத்து வலுவாக உள்ளது. மேலும் அவரது வயதும் அவரது செயல்பாடுகளும் கூட அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பைடனுக்கு,
கடந்த சில தினங்களாக சளி மற்றும் இருமல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால் அதிபர் தேர்தலுக்காக பங்கேற்க இருந்த பிரச்சார கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவருக்கு லேசான அறிகுறிகள் தான் உள்ளன. ஏற்கனவே இவர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். அவர் உடல் நலமாக இருக்கிறார். தற்போது பைடன் டெலாவேர் நகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி அடுத்தடுத்து சிக்கல் வருவதால் பைடன் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா அல்லது மாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}