அகமதாபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சூடு பறக்க மோதிக் கொண்டிருந்த நேரத்தில், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தனது ஸ்டைலான தோற்றத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் விராட் கோலியை உற்சாகப்படுத்த அனுஷ்கா வந்திருந்தார். அவர் அணிந்திருந்த ஆடை அனைவரையும் கவர்ந்தது. ஆடம்பரத்தையும், எளிமையையும் இணைத்து அவர் ஒரு சிறந்த உடையில் பேஷன் ஐக்கான் போல வந்திருந்தார்.
எந்தவித ஆடம்பரமான உடைகளையும் அணியாமல், சாதாரணமாக ஜீன்ஸ் மற்றும் சட்டையில் அனுஷ்கா சர்மா மிகவும் ஸ்டைலாக காணப்பட்டார். அலெக்சாண்டர் வாங் வடிவமைத்த பருத்தி சட்டையை அனுஷ்கா அணிந்திருந்தார். இதன் விலை சுமார் $565 ஆகும்.

சட்டை எளிமையாக இருந்தாலும், அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. சாண்ட்ரோ பாரிஸ் நிறுவனத்தின் Rhinestone and Beaded Jeans-ஐ அணிந்திருந்தார். சட்டை மென்மையான தோற்றத்தை அளித்தாலும், ஜீன்ஸில் இருந்த கற்கள் மைதானத்தின் உற்சாகத்திற்கு ஏற்றவாறு அதிரடியாக இருந்தது.
அனுஷ்கா சர்மா எப்பவுமே சிம்பிளாக இருப்பதையே விரும்புவார். அதிக அளவில் மேக்கப்பெல்லாம் கூட போட மாட்டார். நேற்றும் கூட அப்படித்தான் கூலாக வந்திருந்தார். சருமம் பளபளப்பாகவும், தலைமுடி அலை அலையாகவும் இருந்தது. இது எல்லாவற்றையும் விட பெங்களூரு அணி கோப்பையை வென்றதும், தனது கணவர் முகத்தில் தெரிந்த அந்த நிம்மதியும் அனுஷ்காவை ரொம்பவே உற்சாகமாக்கி விட்டது.
Beauty is fascinating.. அழகு மனதை ஈர்க்கும் அதிசயம்!
உயிரிலே உருவான வீடு
Short Story: அதிகாரம்
Short Story: ஊன்றுகோல்!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஓடும் நதி ஓசையிலே.. தோடி ராகம் கேட்குதே!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}