எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Jun 25, 2025,04:38 PM IST

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவை தவிர தனியார் கல்லூரிகளில் உள்ள 3,450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன.


இதில் அரசு ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதமும்,  நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 50 சதவீதம் இடங்கள் ஆகும். மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இதில் 496 இடங்கள் 7.5% ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே போல், மூன்று அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கும் உள்ளன. தனியார் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 1,900 இடங்களும் உள்ளன. இதில் 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.




 அனைத்து கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இந்த ஆண்டு ஜூன் 6ஆம் தேதி தொடங்கியது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியானது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜூன் 25ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்  கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

news

தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!

news

Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

news

சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!

news

சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!

news

Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!

அதிகம் பார்க்கும் செய்திகள்