சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு சேர விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.
இன்று பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. அதில் தேர்ச்சி அடைந்தவர்கள் கல்லூரி படிப்புகளுக்கு மாறவுள்ளனர். இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் சற்று முன்னர் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் சுமார் 450 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் படி 2 லட்சம் மாணவர்கள் சேர்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களை நிரப்பவதற்காக கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். அதற்காக சேரக்கூடியவர்கள் இன்று முதல் ஆன்லைன்களில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tneaonline.org அல்லது www.dte.gov.in என்ற இணையதள பக்கங்களின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். ஜூன் 12ம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படுகிறது.
பொறியியல் படிப்புகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ம் தேதி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினர்களுக்கு 1500 ரூபாயும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரினிவர்களுக்கு 250 ரூபாயும் பதிவுக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}