சென்னை: இசைஞானி இளையராஜா தனது பிறந்த நாளை கொண்டாடும் ஜூன் 2ம் தேதி தமிழக அரசால் பாரட்டு விழா நடத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா அண்மையில் மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் அரங்கேற்றினார். இந்த நிகழ்ச்சி கடந்த மார்ச் 8ம் தேதி நடைபெற்றது. இதன்மூலம் சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இவரை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
லண்டன் செல்வதற்கு முன் இளையராஜாவை அவரது ஸ்டூடியோவிற்கு சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின். அதன்பின்னர் லண்டன் சென்று விட்டு இளையராஜா திரும்பிய போது தமிழக அரசு சார்பில் அவரை விமான நிலையம் சென்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். அரங்கேற்றம் முடிந்து திரும்பிய பிறகு முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு சென்று இளையராஜா சந்தித்து நன்றி தெரிவித்தார். அன்றைய தினமே முதல்வர் ஸ்டாலின் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் இளையராஜா திரை இசை பயணத்தின் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி தமிழக அரசு சார்பில் ஜூன் இரண்டாம் தேதி இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இளையராஜா ஜூன் 3ம் தேதி பிறந்தவர். ஜூன் 3ம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி பிறந்த நாள் என்பதனால், ஜூன் இரண்டாம் தேதி இளையராஜா தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?
வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}