திண்டுக்கல்: ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவன உரிமையாளர் ராஜசேகர் முன்ஜாமீன் கோரி திருப்பதி மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்துவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். இந்த சம்பவம் திருப்பதி கோவில் மட்டும் இன்றி ஆந்திர அரசியலிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜூலை 17ஆம் தேதி குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு துறை அலுவலகத்தில் திருப்பதி லட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அதில் நெய்க்கு பதிலாக மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. அதோடு தரமில்லாத நெய் அனுப்பியதாக தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் பெயரையும் தெரிவித்திருந்தது திருப்பதி தேவஸ்தானம். இந்த விவகாரம் நாடு முழுவதும் தீயாக பரவியது. அத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்திற்கு களங்கம் விளைவித்து விட்டதாக பக்தர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், திருப்பதி கோயிலுக்கு கலப்பட நெய் அனுப்பிய விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது 10 பிரிவுகளில் திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனர் ராஜசேகர் முன்ஜாமீன் கோரி திருப்பதி மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், தங்களது தரப்பில் எந்தக் கலப்படமும் செய்யவில்லை எனக்கூறி திருப்பதி 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}