மும்பை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் வீரர் அர்ஜூன் டெண்டுல்கர் திடீரென ஆவேசம் காட்டியதால் சற்றே சர்ப்பிரைஸ் ஆன லக்னோ வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், சிரித்தபடி, அர்ஜூனை நோக்கி சத்தம் போட்டு ஏதோ கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் பிரிவுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் இழந்து விட்டது. இந்த சூழ்நிலையில் மும்பைக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கும் நேற்று வாங்கடே மைதானத்தில் லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியின்போது அர்ஜூன் டெண்டுல்கர் திடீரென ஆக்ரோஷம் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. 2வது ஓவரின்போது பந்து வீசிய அர்ஜூன் டெண்டுல்கர், அவரை எல்பிடபிள்யூ ஆக்க முயன்றார். ஆனால் 3வது அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இந்த ஓவரின் முதல் பந்தை ஸ்டாய்னிஸ் அடித்தபோது பந்து நேராக அர்ஜூனை நோக்கி வந்தது. அதைப் பார்த்த அர்ஜூன் படு ஆவேசமாக பந்தை எடுத்து வேகமாக ஸ்டாய்னிஸை நோக்கி வீசுவது போல ஆக்ஷன் காட்டினார். இதனால் மைதானத்தில் பெரும் ஆரவாரம் ஏற்பட்டது.
அர்ஜூனின் இந்த ஆவேசத்தைப் பார்த்து சர்ப்பிரைஸ் ஆன ஸ்டாய்னிஸ் சிரித்தபடி, அர்ஜூனை நோக்கி ஏதோ சத்தமாக பேசினார். பிறகு நிலைமை சகஜமானது. அர்ஜூன் டெண்டுல்கர் பேட்ஸ்மேனாக மட்டுமலல்லாமல் வேகப் பந்து வீச்சாளராகவும் வலம் வருகிறார்.
நேற்றைய போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் விளையாடிய லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை எடுத்தது. சேசிங்கில் மும்பை அணியால் 196 ரன்களை மட்டுமே திரட்ட முடிந்தது.
புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். அதேசமயம், வெறும் 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் பெரும் ஏமாற்றத்தையே ரசிகர்களுக்குக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}