சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 5000 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது சென்னை மாநகர காவல்துறை.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி 10 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாட்டில் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அத்துடன் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சம்பந்தப்பட்ட பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், விஜய், சிவசக்தி என பலரை போலீசார் கைது செய்தனர். இதில் திருவேங்கடம் என்பவர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இடத்தில் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, அடுத்தடுத்த விசாரணைகளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் கைதானார்கள். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் சென்னை மாநகர காவல் துறை 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
அதில் முதல் குற்றவாளியாக நாகேந்திரனும், 2வது குற்றவாளியாக சம்பவம் செந்திலும், 3வது குற்றவாளியாக நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்கிராப் தொழிலைக் கைப்பற்றுவது யார் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}