நாட்டையும் மக்களையும் காப்பாற்ற நான் பிச்சை எடுக்க வந்திருக்கிறேன்.. கெஜ்ரிவால் பரபரப்பு பேச்சு!

May 11, 2024,03:37 PM IST
டெல்லி: மதுபான ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆம் ஆத்மியின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என  பிச்சை எடுக்க வந்திருக்கிறேன் என சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அரவிந்த் கெஜ்ரிவால்  பரபரப்பாக பேசியுள்ளார்.

கடந்த மாதம்  21ஆம் தேதி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறையினர் கைது செய்து,டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் ஜூன் 1ஆம் தேதி வரை நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து இன்று சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு ரோடுஷோ நடத்தி அக்கட்சி கூட்டத்தில்  கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.



அப்போது அவர், ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சி - தொடங்கி 10 ஆண்டுகள் தான் ஆகின்றன.இந்த சிறிய கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை.ஒரே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 4 முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் ஆத் ஆத்மி கட்சியின் பலம் பல மடங்கு அதிகரித்து உள்ளது.தேசத்தின் மிகப்பெரிய ஊழல்வாதிகளை பாஜகவில் இணைத்து வருகின்றனர்.ஆனால் தான் ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக பிரதமர் மோடி பேசி வருகிறார். 

நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என பிச்சை எடுக்க வந்திருக்கிறேன். எனக்கு கிடைத்துள்ள நேரத்தில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். என் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நாட்டு மக்களுக்கு சிந்தத் தயார்.இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று கேட்கிறார்கள். பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று நான் கேட்கிறேன்.பிரதமர் மோடியும் அரசியலில் இருந்து ஓய்வுபெற உள்ளார். அதனால் அமிர்ஷாவை அடுத்த பிரதமர் ஆக்க வேண்டும் என்பதற்காக தான் அவர் தற்போது பிரசாரம் செய்து வருகிறார்.

மோடி ஓய்வு பெற்றால் அவரது உத்தரவாதத்தை பூர்த்தி செய்யப் போவது யார்? ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பாஜக ஆட்சி இருக்கப் போவதில்லை.
முதலமைச்சர் பதவி மீதும், பிரதமர் பதவி மீதும் எனக்கு ஆசை இல்லை என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்