டெல்லி: அமித் ஷாவை பிரதமர் பதவியில் அமர்த்த நரேந்திர மோடி முயல்கிறார். அவருக்கு அடுத்த ஆண்டு 75 வயதாகப் போகிறது. அதற்குப் பிறகு அவரை பதவியில் நீடிக்க விட மாட்டார்கள். எனவே அமித்ஷாதான் அடுத்த பிரதமராக முயன்று வருகிறார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
மதுக் கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால், உச்சநீதிமன்றத்தால் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜூன் 1ம் தேதி அவரை பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் குறி வைத்து அனல் பறக்க பேச ஆரம்பித்துள்ளார் கெஜ்ரிவால்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்கள் கேட்கிறார்கள். முதலில் உங்களது பிரதமர் வேட்பாளர் யார்.. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்.. அதைச் சொல்லுங்கள்.. மோடிக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி 75 வயதாகிறது. இதே மோடிதான், கடந்த 2014ம் ஆண்டு புதிய விதிமுறையைக் கொண்டு வந்தார். அதாவது 75 வயதுடன் தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற பாஜகவின் விதியை நினைவூட்ட விரும்புகிறேன்.
இதே விதியைக் காரணம் காட்டித்தான் அவர்கள் அத்வானிக்கு ஓய்வளித்தார்கள், முரளி மனோகர் ஜோஷிக்கு ஓய்வு கொடுத்தார்கள். சுமித்ரா மகாஜனுக்கு ஓய்வு தந்தார்கள். அதேபோல மோடியும் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார். அவர் தற்போது வாக்கு சேகரிப்பது அவருக்காக அல்ல.. மாறாக அமித் ஷாவுக்காக. அமித் ஷா பிரதமரானால், மோடியின் கியாரண்டிகளை நிறைவேற்றுவாரா என்று கேட்க நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கெஜ்ரிவால்.
இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் இது பெரும் பரபரப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அமித் ஷா கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இந்தியா கூட்டணி கம்பெனியின் கவனத்திற்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் சொல்வது போல பாஜகவில் 75 வயதில் ஓய்வு என்ற விதிமுறையே முதலில் கிடையாது. அப்படி ஒரு விஷயம் பாஜக அரசியல் சாசனத்திலேயே இல்லை. பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார். முழுமையாக 5 ஆண்டுகளை அவர் பூர்த்தி செய்வார். அதில் பாஜகவுக்கு எந்தக் குழப்பமும் இல்லை.
கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில்தான் வெளியில் வந்துள்ளார். நிரந்தர ஜாமீனில் அல்ல.. மீண்டும் அவர் சிறைக்குப் போயாக வேண்டும். அதை மறந்து விட்டு அவர் பேசுகிறார். இந்த இடைக்கால ஜாமீனை ஏதோ தன்னை குற்றவாளி அல்ல என்று அவர் புரிந்து கொண்டால் அது அவரது அறியாமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார் அமித் ஷா.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}