சம்மர் வந்தாச்சு.. புழுக்கமும் ஓவரா இருக்கு.. விற்பனைக்குக் குவியும் தர்பூஸ், இளநீர்!

Apr 03, 2023,05:32 PM IST

சென்னை: கோடைகாலம் நெருங்கி விட்டது. இப்போதே பல ஊர்களில்வெயில் வெளுக்கஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் தர்பூஸ், இளநீர் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.அதேசமயம்,விலையும் அதிகமாக இருக்கிறது.


சென்னையில் வெயிலின் தாக்கம் நன்றாகவே தெரிகிறது. பகல் முழுவதும் புழுக்கம் அதிகமாக இருக்கிறது. மாலைக்கு மேல்தான் சற்று காற்று நன்றாக வீசுகிறது. வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இதே நிலைதான். இதனால் இளநீர், நுங்கு, பதநீர், தர்பூஸ் போன்றவற்றின் தேவையும் அதிகரித்துள்ளது, விற்பனையும் அதிகரித்துள்ளது. அதேசமயம் விலையும் அதிகமாகவே இருக்கிறது.


சென்னை கோயம்பேடுப மார்க்கெட்டுக்கு தர்பூஸ் உள்ளிட்டவற்றின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் இடையில் இதில் குறைவு காணப்பட்டாலும் தற்போது மீண்டும் வருகை அதிகரித்துள்ளது. வருகையை விட தேவை அதிகம் இருப்பதால் விலையும் அதிகரித்துக் காணப்படுகிறது.


வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்களின் வருகையும் கூட தற்போது அதிகரித்துள்ளதாம்.  வழக்கமான விலையை விட 10 சதவீத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. வெயில் காலத்தில் நீர்க்காய்களை அதிகமாக மக்கள் வாங்குவார்கள். எனவே இதன் விலையும் அதிகரித்துள்ளது. அதேசமயம், உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவற்றின் விலை பெரிதாக உயரவில்லை.


வரும் நாட்களில் வெயில் அதிகரிக்க அதிகரிக்க இந்த காய்கறிகள், பழங்களின் விலையும் உயரும் என்று வியாபாரிகள் சொல்கிறார்கள்.  இதற்கிடையே, சென்னையில் சாலையோரங்களில் தர்பூஸ் குவிந்து காணப்படும் காட்சிகள் அதிகரித்து வருகன்றன. வெயிலுக்கு இதமாக தர்பூஸ்தான் அதிகம் சாப்பிடுவார்கள். கூடவே இளநீர் விற்பனையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்