காலுக்கு மிஞ்சி இடும் காலம் தொலைவில் இல்லையடி

Jul 25, 2026,02:05 PM IST

- கவிஞர் பி எஸ் முருகேசன்


அசைந்து நடக்கும் போது 

ஆசை நாயகி


ஓசை நயம் கொடுக்கிறது 

கொலுசு தானடி


மருதாணி அழகு 

என்னை மயக்குதடி


மறைந்திருக்கும் மஞ்சள் முகம் இழுக்குடி


பளபளப்பாய் ஓ வரவை 

பார்க்கும் போது




பாடல் வரி இதயத்திலே 

உதிக்குதடி


வளையல் இடும் ஓசையும் சேரும்போது


வல்லினமாய் வார்த்தைகளும் பிறக்குதடி


கன்னி உன்னை மனது 

எண்ணும் போது


காற்று வந்து என்னை 

கட்டி அணைக்கு தடி


மெட்டி இல்லாக் குறை 

ஒன்றை சுட்டிக் காட்டி


காற்றும் மெதுவாக 

என் தலையில் குட்டு தடி


காலுக்கு மிஞ்சி இடும் 

காலம் தொலைவில் இல்லையடி


காரிகையே கணப்பொழுது போதுமடி


கண்டிப்பாக திருமணம் 

கூடுமடி


மனம் இரண்டும் ஒன்றாக 

சேருமடி 


மகிழ்ச்சியுடன் தாளம் 

போடும்படி


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்