யாராச்சும் ராஜா சார் பாட்டு போடுங்க.. குளுகுளு மழை.. குஷியான அஸ்வின்!

Sep 11, 2023,03:48 PM IST
கொழும்பு: இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசியா கோப்பை போட்டி இன்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் போட்ட டிவீட்டால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசியா கோப்பை போட்டி நேற்று கொழும்பில் நடைபெறுவதாக இருந்தது. இது இந்த இரு அணிகளும் மோதும் 2வது போட்டியாகும். கண்டியில் நடந்த முதல் போட்டியும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டது. நேற்றைய போட்டியும் கூட மழையால் பாதிக்கப்பட்டது.



ரிசர்வ் தினமான இன்று போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றும் மழை காரணமாக போட்டியை நடத்த முடியாமல் தாமதமாகி வருகிறது. பலத்த மழையால் இன்றைய போட்டியும் நடைபெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.

இப்படிப்பட்ட பலத்த மழை பெய்யும் சீசனில் இலங்கையில் ஏன் போட்டியை வைத்தார்கள் என்று பலரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை சாடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் ஒரு டிவீட் போட்டுள்ளார். மழை பெய்யும் காட்சியும், மைதானத்தில் பிட்ச் மீது பெரிய தார்ப்பாய் போட்டு மூடியிருக்கும் புகைப்படம் உள்ளது.

கூடவே கேப்ஷனாக,யாராவது இளையராஜா சார் பாட்டு போடுங்க அப்படியே சூடா ஒரு டீ என்று ஜாலியாக போட்டுள்ளார் அஸ்வின்.  அதற்கு ஒருவர் போட்டுள்ள கமென்ட்டில், பேசாமல் வீரர்கள் எல்லோரும் அருகில் உள்ள தியேட்டருக்குப் போய் ஜவான் படம் பார்த்து விட்டு வரலாம் .. அதுக்குள்ள மழையும் விட்டுரும் என்று ஜாலியாக பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்