"இந்தியா"வை மாற்றிய அஸ்ஸாம் முதல்வர்.. மாற்ற விரும்பாத "டிவிட்டர்"

Jul 19, 2023,02:13 PM IST
குவஹாத்தி: அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தனது டிவிட்டர் பயோவில் இருந்த இந்தியா என்ற வார்த்தையை பாரத் என்று மாற்றியுள்ளார். ஆனால் டிவிட்டரைப் பொறுத்தவரை அது இன்னும் இந்தியா என்றுதான் காட்டுகிறது. பார்க்கவே முரண்பாடாக தெரிகிறது இது.

பெங்களூரில் கூடிய எதிர்க்கட்சிகளின் கூட்டணிக் கூட்டத்தில் தங்களது கூட்டணியின் பெயரை I.N.D.I.A என்று வைத்திருப்பதாக அறிவித்தனர். இது நாடு முழுவதும் பேசு பொருளாகி விட்டது. மிகவும் வேகமாக இந்த பெயர் வைரலானது. மக்களிடையே இது பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



எப்படி இப்படி யோசிச்சாங்க என்று பலரும் ஆச்சரியப்பட்டு கேட்கும் அளவு இந்த பெயர் விளங்குகிறது. வெகு வேகமாக இந்த பெயர் மக்கள் மத்தியிலும் பரவி விட்டது. நல்ல ரீச் கிடைத்துள்ளது. இதனால் கடுப்பாகியுள்ள பாஜகவினர் இந்தியா என்ற வார்த்தைக்குப் பதில் பாரத் என்ற இந்திப் பெயரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா முதல் ஆளாக தனது டிவிட்டர் பயோவில் இருந்த இந்தியா என்ற பெயரை தூக்கி விட்டு பாரத்தை சேர்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு டிவீட்டும் போட்டுள்ளார். அதில், நமது நாகரீக சமுதாயம், இந்தியா மற்றும் பாரத்தை சேர்ந்துதான் உருவானது. பாரதத்திற்கு பிரிட்டிஷ்காரர்கள்தான் இந்தியா என்று பெயரிட்டனர். இதுபோன்ற அடிமை தளை போதையிலிருந்து நாம் இன்னும் விடுதலை பெற வேண்டியுள்ளது. நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினர். அந்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது, என்றும் தொடரும். பாரதத்திற்காக பாஜக என்று கூறியுள்ளார் ஹிமந்தா.

என்னதான் ஹிமந்தா தனது பயோவில் பாரத் என்று மாற்றினாலும் கூட  அதே பயாவில் குவஹாத்தி, இந்தியா என்றுதான் வருகிறது. அதாவது ஹிமந்தா மாற்ற விரும்பினாலும், டிவிட்டர் நிறுவனம் இந்தியாவை மாற்றவில்லை என்பது பார்க்கவே வித்தியாசமாக உள்ளது.

ஒரு காலத்தில் காங்கிரஸில் இருந்தவர்தான் ஹிமந்தா பிஸ்வா. அவர் மீது அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழக்குத் தொடர்ந்திருந்தன. இந்த நிலையில்தான் அவர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அஸ்ஸாம் முதல்வரானார். காங்கிரஸின் தீவிர எதிர்ப்பாளராக ஹிமந்தா பிஸ்வா செயல்பட்டு வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்