சென்னை: வரும் லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணி ரெடியாகி தொகுதிகளை ஒதுக்கி விட்ட நிலையில் திமுக வேட்பாளர்கள் குறித்த ஒரு உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திமுக கூட்டணியில், எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள், எத்தனை தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டு விட்டன. திமுக நேரடியாக 21 தொகுதிகளிலும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் சூரியமூர்த்தி உதயசூரியன் சின்னத்திலும் என 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் திமுக வேட்பாளர்கள் இவர்கள்தான் என்று கூறி ஒரு உத்தேசப் பட்டியல் உலா வருகிறது. அந்த தொகுதிகளில் போட்டியிட போகும் வேட்பாளர்கள் யார் என்ற விபரங்கள் இடம்பெற்றுள்ளன. சில தொகுதிகள் இரண்டு பேரில் யாருக்காவது கொடுக்கலாம் என சந்தேகத்துடனும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தேச பட்டியல் தான் தற்போது செம டிரெண்டாகவும், ஹாட் டாப்பிக்காகவும் பேசப்பட்டு வருகிறது.

இதுதான் அந்தப் பட்டியல்:
1. வடசென்னை - கலாநிதி வீராசாமி
2. தென் சென்னை - தமிழச்சி தங்கப்பாண்டியன்
3. மத்திய சென்னை - தயாநிதி மாறன்
4. ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
5. காஞ்சிபுரம் (தனி) - செல்வம்
6. அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
7. திருவண்ணாமலை - அண்ணாதுரை
8. வேலூர் - கதிர் ஆனந்த்
9. தருமபுரி - டாக்டர் செந்தில்குமார் / ஆ.மணி/பழனியப்பன்
10. பெரம்பலூர் - அருண் நேரு
11. கள்ளக்குறிச்சி -கௌதம சிகாமணி/ சிவலிங்கம்
12. தேனி - தங்கதமிழ்ச்செல்வன்
13. சேலம் - செல்வகணபதி / பி.கே.பாபு
14. ஈரோடு -பிரகாஷ்
15. நீலகிரி (தனி) - ஆ.ராசா
16. பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்
17. தஞ்சாவூர் - எஸ்.எஸ். பழனிமாணிக்கம்/அஞ்சுகம் பூபதி
18. தென்காசி (தனி) - தனுஷ் குமார்
19. ஆரணி - தரணிவேந்தன்
20. தூத்துக்குடி - கனிமொழி
21. கோவை - டாக்டர்.மகேந்திரன்./ கோகுல்
(இது திமுகவின் அதிகாரப்பூர்வ பட்டியல் அல்ல.. வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் உத்தேசப் பட்டியல்தான்.. எனவே அதிகாரப்பூர்வ பட்டியலை மட்டுமே நம்புமாறு கேட்டுக் கொள்கிறோம்)
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}