பாஸ்டன்: இசை நிகழ்ச்சியில் பெண் எச்ஆர் நிர்வாகியுடன் நெருக்கமாக இருந்து சிக்கி சர்ச்சையானதைத் தொடர்ந்து ஆஸ்ட்ரோனாமர் சிஇஓ ஆண்டி பைரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாஸ்டன் நகரில் நடந்த கோல்ட்பிளே இசை நிகழ்ச்சியில் ஆண்டி பைரனும், அவரது எச்ஆர் அதிகாரி கிறிஸ்டின் கேபோட்டுடன் கலந்து கொண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தபோது திடீரென கேமரா அவர்கள் பக்கம் திரும்பியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரும் டக்கென விலகி அங்கிருந்து வெளியேறினர். பிறகுதான் இவர்கள் யார் என்று தெரிய வந்து வர்த்தக உலகில் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டார்ட் அப் நிறுவனமான ஆஸ்ட்ரோனாமர் நிறுவனத்தின் சிஇஓ, தனது நிறுவன எச்ஆர் அதிகாரியுடன் நெருக்கமாக இருந்தது பேசு பொருளானது. பலர் இதை விமர்சித்தனர். சிலர், இது அவர்களது தனிப்பட்ட விவகாரம். இதை வெளிச்சம் போட்டுக் காட்டியது தவறு என்று வாதிட்டு வந்தனர். ஆண்டி பைரனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அதேபோல கிறிஸ்டின் கேபோட் திருமணமாகி விவாகரத்தும் ஆனவர் என்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் தற்போது ஆண்டி பைரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நிறுவனத்தின் தரத்தைக் காக்கும் வகையில் நடந்து கொள்ளாததால் அவரைப் பதவி விலகுமாறு ஆஸ்ட்ரோனாமர் நிறுவனம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அவர் பதவி விலகி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்ட்ரோனாமர் நிறுவனத்தின் லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில்,
அஸ்ட்ரோனமர் (Astronomer) நிறுவனம் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கடைப்பிடித்து வந்த நல்ல பழக்கவழக்கங்களுக்கும், கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. எங்கள் தலைவர்கள் நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டும், பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், சமீபத்தில் ஒரு தலைவர் அப்படி நடந்து கொள்ளவில்லை. அதனால், ஆண்டி பைரன் வேலையை விட்டு விலகிவிட்டார். எங்கள் நிர்வாகக் குழுவும் அதை ஏற்றுக் கொண்டது. இப்போது, இணை நிறுவனரான பீட் டிஜாய் தற்காலிக தலைமை அதிகாரியாக இருப்பார். விரைவில், எங்கள் நிறுவனத்திற்கு புதிய தலைமை அதிகாரியை பணியில் அமர்த்துவோம் என்று அது தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தால் ஆண்டி பைரன் குடும்பத்திலும் பிரச்சினைகள் வெடித்துள்ளதாக தெரிகிறது. அவரது மனைவி மேகன் கெர்ரிகன், பள்ளி ஒன்றில் உதவி இயக்குநராக இருந்து வருகிறார். தனது பெயரில் இருந்த துணை பெயரை அவர் தனது பேஸ்புக்கில் நீக்கி விட்டார். அதை நீக்கிய சிறிது நேரத்தில் தனது பேஸ்புக் கணக்கையும் அவர் டீஆக்டிவேட் செய்து விட்டார். தனது கணவரை அடுத்து அவர் விவாகரத்து செய்யக் கூடும் என்று கூறப்படுகிறது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}