சென்னை: லியோ புயலால் அத்தனை பேரும் பாதிக்ககப்பட்டுக் கிடக்க சத்தமில்லாமல் ஒரு கம்பெனியை ஆரம்பித்து அதற்கு முதலாளியாகியுள்ளார் நடிகர் அஜீத்குமார்.
நடிகர் அஜீத் ஆரம்பத்திலிருந்தே வித்தியாசமானவர். நடிகராக வருவதற்கு முன்பு மெக்கானிக்காக இருந்தவர். நடிக்க வந்த பின்பும் கூட அதை ஒரு தொழிலாகத்தான் பார்த்தார். ஆரம்பத்திலிருந்தே தான் உண்டு தனது தொழில் உண்டு என்று மட்டுமே இருப்பவர். தேவையில்லாமல் எதிலும் தலையிடவும் மாட்டார். பேசவும் மாட்டார்.

இந்த நிலையில் சமீப காலமாக பல்வேறு ஊர்களுக்கும் அவர் பைக்கிலேயே ரைடு போய்க் கொண்டிருந்தார். சரித்தான் பொழுது போகவில்லை அல்லது ஜாலியான அனுபவத்திற்காக செல்கிறார் என்றுதானை் பலரும் நினைத்தனர். அவர் ஒரு பைக் பிரியர், ரேசரும் கூட. எனவே பைக் ரைடுகளின் மீது அலாதிப் பிரியமாக இருக்கிறார் என்று நினைத்தனர்.
ஆனால் இந்த பைக் பயண அனுபவத்தை வைத்து ஒரு நிறுவனத்தையே ஆரம்பித்து விட்டார் அஜீத். வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார் அஜீத். இந்த நிறுவனம் மோட்டார் சைக்கிள் பயணம் செய்ய விரும்புவோருக்கு உதவும். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த பயிற்சி மற்றும் அனுபவம் வாய்ந்த ரைடர் உங்களுடன் கூடவே வருவார். உங்களுக்கு பல்வேறு ஊர்களையும் சுற்றிக் காட்டுவார்.. பயணத்தின்போது எப்படி செல்ல வேண்டும் என்பது குறித்து முறையான வழிகாட்டுவார். அருமையான அனுபவம் உங்களுக்குக் கிடைக்க அவர் உதவி செய்வார்.

தற்போதைக்கு ராஜஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய பகுதிகளில் வீனஸ் நிறுவனம் தனது சேவையை மேற்கொள்ளவுள்ளது. பைக்குகளை வாடகைக்கு விடுவது, சுற்றுலா உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் மேற்கொள்ளும். இதன் சேவை அக்டோபர் 23ம் தேதி முதல் தொடங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்.
rm@RideWithVenus.com
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}