மெல்போர்ன்: ஆஸ்திரேலிாயவில் ஒரு சூப்பர் சட்டம் வரப் போகிறது. அதாவது, வேலை நேரம் முடிந்தபிறகு அலுவலகம் தொடர்பான கால், மெசேஜ், இமெயில் ஆகியவற்றை நிராகரிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கும் புதிய சட்டம் தான் இது.
ஒரு நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் பணி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்றபிறகு, ஒரு சில சமயங்களில் மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு "ஏம்ப்பா இதை மட்டும் பண்ணிடேன்.. அதை கொஞ்சம் பாக்கறியா.. ஆள் கம்மியா இருக்கு.. நீயும் கொஞ்சம் வந்து உக்காரு" என்று வேலை தொடர்பாக நச்சரிப்பது வழக்கம்.

இன்னும் சில அலுவலகங்களில், ஆபீஸுக்கு வருமாறும் கூறி தொணத்துவதும் உண்டு. சில சமயங்களில் மீண்டும் அலுவலகத்திற்கு வரச் சொல்லி அவர்கள் கேட்கும் தகவல்களை வழங்க வேண்டிய நிலையும் எற்படும். அது மட்டும் இன்றி வரா இறுதி நாட்களிலும் வேலை செய்தல், முதலாளிகள் கேட்கும் பைல்களை எடுத்து தருதல் என பாஸ்களின் அக்கப்போர்கள் அதிகமாகவே இருக்கும்.. சிலருக்கு!
அப்படிப்பட்ட சூழ்நிலையில் தொழிலாளர்கள் வீட்டிற்குச் சென்ற பிறகும் அலுவலகத்தைப் பற்றியே சிந்திக்கும் நிலை அல்லது ஏதாச்சும் கால் பண்ணுவாங்களோ என்று அஞ்சும் நிலை ஏற்படுகிறது. எப்போது யார் கூப்பிடுவார்கள் என்ற பதட்டமான மனநிலையிலேயே இருக்கும் சூழல் உருவாகிறது. வேலை இல்லாத நேரத்தில் அமைதியாக பொழுதை கழிக்கவோ, குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ முடிவதில்லை. இதனால் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகின்றன.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆஸ்திரேலிய பசுமை கட்சி மற்றும் சுயேட்சை செனட்டர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி வேலை நேரம் முடிந்த பின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமை சட்டம் வரும் 26ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது என ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது. இச்சட்டம் ஏற்கனவே பிரான்ஸ்,ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
சோ, பாஸ்களே.. இனிமேல் உங்க ஸ்டாஃப்ஸ் கிட்ட ஜாக்கிரதையா இருந்துக்குங்க.. இல்லாட்டி நீ பாஸா இல்லை லூசான்னு பளிச்சுன்னு கேட்டுருவாங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}