ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

Dec 10, 2025,01:21 PM IST

மெல்போர்ன்: போதைக்கு அடிமையாக்கும் அல்காரிதம்கள், ஆன்லைன் விஷமிகள் மற்றும் டிஜிட்டல் குற்றங்கள் ஆகியவற்றிலிருந்து சிறார்களைப் பாதுகாக்கும் நோக்கில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 10 முதல் நடைமுறைக்கு வந்தது.


வேறு எந்த நாடும் இவ்வளவு பெரிய அளவில் தடையை அமல்படுத்தாததால், இந்த நடவடிக்கை உலகளாவிய அரசாங்கங்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.


இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், ரெடிட், டிவிட்ச், ஸ்னாப்சாட், திரெட்ஸ், கிக், எக்ஸ் ஆகியவைதான் தடை செய்யப்பட்டுள்ளன.  பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இந்தத் தடை குடும்பங்களுக்குள் சமூக ஊடகப் பயன்பாடு குறித்து விவாதிக்கத் தூண்டியதை ஒரு வெற்றியாகக் கருதுவதாகக் கூறியுள்ளார். 




இந்த புதிய சட்டத்தின் கீழ், தடை செய்யப்பட்டுள்ள தளங்கள் 16 வயதுக்குட்பட்டோரின் கணக்குகளை செயலிழக்கச் செய்யவும், புதிய கணக்குகள் உருவாக்கப்படுவதைத் தடுக்கவும் நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எடுத்த நடவடிக்கையை அரசுக்கு உரிய முறையில் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், 49.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.


ஆஸ்திரேலியா அரசின் இந்தத் தடையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளன. 16 வயசதுக்குட்பட்டோர் தங்களது தளங்களில் இல்லாதவாறு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளன. மேலும், இதுதொடர்பான நடவடிக்கைகளையும் அவை உறுதி செய்து வருகின்றன.


இதில் எக்ஸ் தளம் மட்டும் ஆஸ்திரேலியா அரசின் நடவடிக்கையை எதிர்த்துள்ளது. இது தனி மனித சுதந்திரத்தை நசுக்கும் செயல் என அது தெரிவித்துள்ளது.


ஆஸ்திரேலியா அரசின் தடையிலிருந்து சில தளங்களுக்கு விலக்கு கிடைத்துள்ளது. அதாவது, Discord, GitHub, Google Classroom, 

LEGO Play, Messenger, Pinterest, Roblox, Steam and Steam Chat, WhatsApp, YouTube Kids ஆகியவையே அவை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

news

தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!

news

Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

news

சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!

news

சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!

news

Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!

அதிகம் பார்க்கும் செய்திகள்