டெல்லி: ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வென்றுள்ள நிலையில் அந்த அணியின் வீரர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் சில இந்திய ரசிகர்கள். அதை விட கொடுமையாக, இறுதிப் போட்டியில் சதம் அடித்த டிராவிஸ் ஹெட்டின் 1 வயது மகளுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் பலருக்கு கிரிக்கெட் என்பது மதம் போன்றது. அது பல நேரங்களில் "மத வெறி"யாக மாறி விடுகிறது. தாங்கள் எதிர்பார்க்காதது நடந்து விட்டால், வெறியாகி விடுகிறார்கள். இப்படித்தான் முன்பு விராட் கோலி சரியாக விளையாடவில்லை. உடனே அனுஷ்கா சர்மாவை கடுமையாக விமர்சித்துத் திட்டினர். அதேபோல விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியின் மகளுக்கும் பலாத்கார மிரட்டல் விடுத்து அநாகரீகமாக நடந்து கொண்டனர்.
இந்த நிலையில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியுற்று, ஆஸ்திரேலியா வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார். இதனால் அவர் மீதும், ஆஸ்திரேலிய வீரர்கள் மீதும் சில ரசிகர்கள் வன்மத்தைக் கொட்டியுள்ளனர்.
அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள டிராவிஸின் மனைவி குறித்து ஆபாசமாக பேசியுள்ளனர். மிரட்டியுள்ளனர். அவரது 1 வயது மகளுக்கு பலாத்கார மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கிளன் மேக்ஸ்வெல் மனைவி வினி ராமனுக்கும் சிலர் இதுபோல மிரட்டல் விடுத்துள்ளனர். கிளன் மேக்ஸ்வெல் மனைவி தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் ரசிகர்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}