சென்னை: நடிகை திரிஷா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி நடிகை திரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. சமீபத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது நடிகை திரிஷா குறித்து அபத்தமாகவும், அவதூறாகவும் பேசினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் ராஜு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.
தற்போது நடிகை திரிஷா தரப்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திரிஷாவின் வக்கீல்கள் அனுப்பியுள்ள நோட்டீஸில், அடுத்த 24 ணி நேரத்திற்குள் முன்னணி செய்தி நிறுவனங்கள் வாயிலாக நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் எழுத்து வடிவில் இருக்கும் அத்தனை அவதூறுகளையும் நீக்க வேண்டும்.
ஏ.வி.ராஜு மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். 4 நாட்களுக்குள் இதுகுறித்து பதில் அளிக்குமாறும், திரிஷாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}