ஐ லவ் யூ..ரதி.. அவளின் (ல்) அவன்! (14)

May 12, 2026,01:14 PM IST

- ரதி தேவி


ரதி தன் கைகளால் மதனின் நெற்றியில் விபூதியை இட்டு

தன் செவ்விதழ்களால் அதனை இதமாக ஊதும் போது .....

ரதியின் சுவாச இளந்தென்றலில் மதன் ஒருகணம் அவனையே மறந்து... இதயம் இளைப்பாற....


மதன்.. மதன்....

என்ன ஆச்சு மதன்...


என்ன ஆச்சா .ரதி ... இன்னும் ஒரு தடவை ஊதி விடு ..இந்நாளுக்காகத்தான் ஒவ்வொரு விடியலையும் தேடினேன்.....


ம்ம்....


ரதி .....ரதி ..




சொல்லுங்க மதன் ...

அருகில் இருந்த குங்குமத்தை எடுத்து ரதியின் நெற்றியில் வைக்கப் போகும் போது.


மதன் வேண்டாம்..


ஏன் ரதி ...


இல்லை இப்போது வேண்டாம்...


ப்ளீஸ் எனக்காக இன்றே. இப்போதே ஏற்றுக் கொள்...

ரதியின் கையைத் தடுத்து நெற்றியில் மிக நெருங்கி சென்று குங்குமத்தை வைக்கும் போது..

அவள் இமைகளை மூடி தாழ்த்தி கொண்டாள் ...


மதன் ரதியின் முகத்தையே ஓர் கணம் பார்த்து ரசித்து கொண்டே இருந்தான் .. அப்படியே ரதிக்கு கன்னத்தில் தன் முத்தங்களை பதிக்க எண்ணினான்.,..


ரதி நிமிர்ந்து பார்த்தாள். மதனின் குறு குறு பார்வை .....என்னவோ செய்ய .. சட்டென்று எழுந்து செல்ல......


ரதி ..நில்லு ...


வாங்க மதன்....


இருவரும் ஒன்றாகவே நடந்து சென்று கோவிலைச் சுற்றி கும்பிட்டு வெளியே வரும் போது.... மதன் ரதியின் கையை பிடித்து..


ரதி.. நாம் இருவரும் இதே கோவிலில் எப்போது மாலையுடன் வலம் வருவோம்.....


ம்ம்.....

ரதி மதனின் கையை விட்டு வெளியே நடந்தாள்.....


வெளியே வந்ததும் ரதியின் போன் அலாரம் கொடுத்தது ...


அதை எடுத்து பார்த்தால்.. ரதியின் அம்மா...


ஹலோ..ரதி‌... எங்க இருக்க...


கோவிலில் மா.... ஏன்.. என்னாச்சு மா ...


அம்மா... தயக்கத்துடன்... கதிர் போன் பண்ணினான் மா .....


ரதிக்கு தூக்கி வாரி போட்டது.. ஒருவேளை கதிரின் நண்பர் இங்கு பார்த்ததைச் சொல்லி இருப்பானோ .....


ரதி யோசிக்க யோசிக்க கொஞ்சம் இதயம் படபடத்தது....


என்ன சொன்னான் மா ...


நீ வீட்டுக்கு வா . நேரில் சொல்றேன்..


சரி மா...


ரதி போன்ல அம்மாவா இல்லை இல்லை..அத்தை யா... என்ன சொன்னாங்க..


ஒன்னும் இல்ல மதன்..


ஆர் யு ஒகே ரதி ..


எஸ் ...


ஒகே ..நாம அடுத்து எங்க போகலாம்....

பார்க்.. ஹோட்டல்...பீச்.....அடுக்கி கொண்டே போனான்....


நில்லுங்க மதன்...

நான் வீட்டுக்கு போகனும்..


அப்படி னா நானும் வரவா என்று சிரித்தான்....


ம்ம்....


ஒகே ..ரதி 


ஹோட்டல் போகலாம்..

ஏதாவது சாப்பிடலாம்..


ஒகே ...


இருவரும் ஆட்டோவில் ஏறினர்...ரதி ஓரமாக இருக்க.. ரதியின் அருகே மதன் நெருங்கி வர ..ரதி .. என்று ரதியின் கையைப் பற்ற..அவள் கையை எடுத்தாள் ..ரதி ..


ம்ம்.. சொல்லுங்க மதன்..


இந்த தருணங்களுக்காக தான் இத்தனை நாள் தவம்... ரதி.. என்னருகில் இருக்கும் இந்த தருணத்தில் அனைத்தும் மறந்த பித்தன் ஆனேன்... மறுபடியும் ரதியின் கையைப் பற்ற.. இப்போது ரதி மறுக்காமல் ஏற்றுக் கொண்டாள்....


ரதி...


ம்ம்...


நான் பற்றிய உந்தன் கைகளை இறுதிவரை விட மாட்டேன்.. ரதி ..


ஐ லவ் யூ..ரதி என்று அவள் காதின் அருகே சென்று கூற ......


ரதி செய்வதறியாது அமைதியானாள்...


(தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்