Axiom4: விண்வெளியில் புது வரலாறு எழுதும் இந்தியா.. ISS நிலையத்திற்குப் பயணமானார் சுபான்ஷு சுக்லா

Jun 25, 2025,12:18 PM IST

டெல்லி:   இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் 3 விண்வெளி வீரர்கள் இன்று பிற்பகல் ஆக்சியம் மிஷன் 4 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணமாகியுள்ளனர். அவர்களைச் சுமந்து சென்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஜூன் 22ம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டு இன்று செயல்படுத்தப்பட்டது.


இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12 மணியளவில், ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம், ஃபால்கன்-9 ராக்கெட் மூலம், நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A இலிருந்து ஏவப்பட்டது. ராக்கெட் ஏவுதல் வெற்றிகரமாக இருந்தது. தற்போது முதல் கட்டமும் வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது.  இந்திய நேரப்படி நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்கலம் சென்றடையும். 


குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரர் ஆவார். இதற்கு முன்பு விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா 1984 இல் விண்வெளிக்குப் பயணப்பட்டு, முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாறு படைத்தார். அவர் சாதனை படைத்து 40 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது இந்தியர் விண்வெளிக்குச் சென்றுள்ளார்.




39 வயதான சுபான்ஷு சுக்லா, ஒரு போர் விமானி ஆவார். இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்திற்காக இஸ்ரோவால் முதன்மை விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விண்கலம் புறப்படுவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார். இது குழுவினர் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு செயல்முறை.


15 நாட்களுக்கு சுபான்ஷுவின் விண்வெளி பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தில், ஆக்சியம்-4 மிஷன் குழுவில் உள்ள நான்கு உறுப்பினர்களும் 60 அறிவியல் சோதனைகளை மேற்கொள்வார்கள். இதில் ஏழு சோதனைகள் இந்திய ஆராய்ச்சியாளர்களால் முன்மொழியப்பட்டவை.


குரூப் கேப்டன் சுக்லா விண்வெளியில் இருந்து பூமிக்கு ஒரு அவுட்ரீச் திட்டத்தில் பங்கேற்பார் மற்றும் விண்வெளியில் இருந்து ஒரு முக்கிய பிரமுகருடன் உரையாடுவார். ஏற்கனவே ஏழு குழு உறுப்பினர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளனர்.


ஆக்சியம்-4 க்கான முதல் ஏவுதல் மே 29 என அறிவிக்கப்பட்டதிலிருந்து பல தாமதங்கள் ஏற்பட்டன.  வானிலை, தொழில்நுட்ப சிக்கல் என தாமதங்கள் தொடர்ந்தன. இந்த நிலையில் தற்போது எல்லாம் சரியாகி ஏவுதல் உறுதியாகியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான நான்காவது தனியார் விண்வெளி வீரர் மிஷனான ஆக்சியம்-4 மிஷன், ஹூஸ்டனை தளமாகக் கொண்ட ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தால் நாசாவுடன் இணைந்து இயக்கப்படுகிறது.


இந்தோ-அமெரிக்க ஆக்சியம்-4 மிஷன், மிஷன் ஆகாஷ் கங்கா என்று இந்தியாவால் குறிப்பிடப்படுகிறது, இது பிரதமர் நரேந்திர மோடியின் ஜூன் 2023 இல் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது இந்தியா-அமெரிக்கா கூட்டு ஒப்பந்தத்தில் உருவானது. இந்த ஒப்பந்தம், ஒரு இந்திய விண்வெளி வீரரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதில் இஸ்ரோ மற்றும் நாசா இடையே ஒரு கூட்டு முயற்சியை நோக்கமாகக் கொண்டது. இது இந்தோ-அமெரிக்க விண்வெளி ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.


சுபான்ஷு குடும்பத்தினர் நெகிழ்ச்சி




சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணத்தை அவரது பெற்றோர், குடும்பத்தினர், லக்னோவில் இருந்தபடி பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர். அவரது தாயார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி தனது மகன் விண்வெளிக்குச்  செல்வதைப் பார்த்து மகிழ்ந்தார்.


விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ள சுக்லா,  விண்கலத்தில் இருந்தபடி பூமிக் கட்டுப்பாட்டு மையத்துடன் பேசியதையும் அவரது குடும்பத்தினர் பார்த்து மகிழ்ந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்