டெஹ்ரான்/டெல் அவிவ்: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஆறாவது நாளாகத் தொடர்ந்து வரும் மோதலில், இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது ஈரான். இதுகுறித்து ஈரான் மதத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, இறைவனின் பெயரால், போர் தொடங்குகிறது என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
ஈரானின் உச்சபட்ச தலைவரான கமேனி, தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில், இறைவனின் பெயரால், போர் தொடங்குகிறது. பயங்கரவாத சியோனிச (இஸ்ரேல்) ஆட்சிக்கு ஈரான் ஒரு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாங்கள் கருணை காட்ட மாட்டோம் என்று எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான சமீபத்திய தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) புதன்கிழமை அறிவித்ததையடுத்து, கமேனியின் இந்த கடுமையான எச்சரிக்கை வெளிவந்துள்ளது. பெருமைமிக்க ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3 இன் 11வது அலை, ஃபத்தா-1 ஏவுகணைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது என்று ஈரான் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
மேலும், ஈரான் இஸ்ரேலை நோக்கி சரமாரியாக டிரோன்களையும் ஏவி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை இடை மறித்து தாக்கும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
முன்னதாக, புதன்கிழமை அதிகாலை, இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானிய தலைநகரைத் தாக்கின. தாக்குதலுக்கு முன், பொதுமக்கள் வெளியேற வேண்டும் என சமூக ஊடகங்களில் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. டெஹ்ரானின் பிருசி, சபலன் மற்றும் சய்யாத் பகுதிகளில் வெடிச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
பிக் பாஸ் தமிழ் .. சீசன் 9.. அக்டோபர் 5ம் தேதி முதல்.. வீடுகள் தோறும் இனி கலகலதான்!
SIR திட்டத்தையே மொத்தமாக ரத்து செய்ய நேரிடும்.. சுப்ரீம் கோர்ட் திடீர் எச்சரிக்கை
வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. தேதி நீட்டிப்பு கிடையாது.. ஐடி துறை அறிவிப்பு
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
உயிரின் சிரிப்பு
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
{{comments.comment}}