அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப் போறாங்க.. 3 மாநிலங்களில் அந்த நாளில்.. மதுக் கடைகளுக்கு லீவு!

Jan 12, 2024,12:20 PM IST

டெல்லி: அயோத்தி ராமர் கோவில் திறப்பையொட்டி ஜனவரி 22ம் தேதி சில மாநிலங்களில் மதுக் கடைகளுக்கு அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராமரின் குழந்தைப் பருவ சிலை புதிதாக கட்டப்பட்டுள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் ஜனவரி 22ம் தேதி அயோத்திக்கு வருகை தரவுள்ளனர். இந்த விழாவை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாட பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தடபுடலாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் அன்றைய தினம் அதாவது ஜனவரி 22ம் தேதி சில மாநிலங்களில் மதுக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய தினம் மது விற்பனை முழுமையாக தடை செய்யப்படுவதாக இந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. மது விற்பனை மட்டுமல்லாமல், ஹோட்டல்கள், பார்களிலும் கூட மது பரிமாறக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.



சமீபத்தில் காங்கிரஸ் வசமிருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றிய சட்டிஸ்கர் மாநிலத்தில்தான் முதலில் இந்த மது விற்பனைத் தடை அறிவிப்பு வெளியானது. மொத்த மாநிலத்திலும் ஜனவரி 22ம் தேதி மதுவுக்குத் தடை விதிக்கப்படுவதாக மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்துள்ளார்.

அதேபோல பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநில்ததிலும், மது விற்பனைத் தடையை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

அயோத்தி இடம் பெற்றுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்திலும் ஜனவரி 22ம் தேதி மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   ஜனவரி 22ம் தேதியை தேசிய விழாவாக கொண்டாடுவோம் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அன்றைய தினம் கல்விக் கூடங்களுக்கும் உ.பி. அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

மதுக் கடைகளுக்கு விடுமுறை விட்டுள்ள 3 மாநிலங்களும் பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் இதுபோல விடுமுறை விடப்படுமா என்பது தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்